டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் போராட்டம் ஜூன் 30 க்கு பிறகு மூடப்படும் என வாக்குறுதி
15 Jun 2026, 12:43 am
<p><strong>டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் போராட்டம் ஜூன் 30 க்கு பிறகு மூடப்படும் என வாக்குறுதி</strong></p><p>செங்கல்பட்டு, ஜூன் 14- செங்கல்பட்டு ராட்டினம் கிணறு பகுதிக்கு அருகே செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் மதுபானக் கடையால் பொதுமக்களுக்குப் பல்வேறு இடையூறு களும், சமூகப் பிரச்சினைகளும் ஏற்படுவ தாகப் புகார்கள் எழுந்துள்ளன. இதனைத் தொடர்ந்து, அக்கடையை உடனடியாக அகற்ற வலியுறுத்தி அப்பகுதி மக்கள் இன்று திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். நகரின் மையப்பகுதியில் இக்கடை அமைந்திருப்பது பள்ளி மாணவர்கள், பெண்கள் மற்றும் முதியவர்கள் உள்ளிட்ட பொதுமக்களுக்குப் பெரும் அசௌக ரியத்தை ஏற்படுத்துவதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டினர். போராட்டத்தின் தீவிரத்தை உணர்த்தும் வகையில், பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கடையின் முன்பாக அமர்ந்து கடையைத் திறக்க விடாமல் முழக்கமிட்டனர். இந்த திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. அசம்பாவிதங்களைத் தவிர்க்க செங்கல்பட்டு நகரக் காவல்துறை யினர் தீவிரப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். போராட்டம் நீடித்த நிலையில், செங்கல்பட்டு வட்டாட்சியர் வாசுதேவன் மற்றும் நகர காவல் ஆய்வாளர் லட்சுமிபதி ஆகியோர் போராட்டக்காரர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில், வரும் ஜூன் 30-ஆம் தேதிக்கு மேல் இந்தக் கடை நிரந்தர மாக மூடப்படும் என்று அதிகாரிகள் உறுதிய ளித்தனர். இதனைத் தொடர்ந்து, போராட்டக் காரர்கள் தற்காலிகமாகத் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். பொதுமக்கள் கலைந்து சென்றவுடன், வட்டாட்சியர் மற்றும் காவல் ஆய்வாளர் முன்னிலையில் பலத்த பாதுகாப்புடன் கடை திறக்கப்பட்டு மீண்டும் வழக்கம்போல் மது விற்பனை நடைபெற்றது. இருப்பினும், அதி காரிகள் அளித்த வாக்குறுதியை நிறை வேற்றுவார்களா என்பதைப் பொறுத்தி ருந்துதான் பார்க்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.</p>
