செங்கல்பட்டு: கோடை மழையில் நனைந்து வீணான நெல் மூட்டைகள் விவசாயிகள் கண்ணீர்!
9 May 2026, 2:43 am

செங்கல்பட்டு: கோடை மழையில் நனைந்து வீணான நெல் மூட்டைகள் விவசாயிகள் கண்ணீர்!

செங்கல்பட்டு, மே 8- செங்கல்பட்டு மாவட்டத்தில் பெய்த திடீர் கனமழையால், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டி ருந்த ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தன.

இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு உள்ளாகி வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தின் திருக்கழுக் குன்றம், மதுராந்தகம், லத்தூர், சித்தாமூர் உள்ளிட்ட பல்வேறு ஒன்றியங்களில் விவ சாயிகளின் கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் 89 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலை யங்கள் திறக்கப்பட்டுள்ளன.

தற்போது மாவட்டம் முழுவதும் சுமார் 1.8 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப் பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரி விக்கின்றன.

மழையால் ஏற்பட்ட பாதிப்பு சட்டமன்றத் தேர்தல் பணிகள் காரண மாக, கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை முறையாகக் கிடங்குகளுக்கு மாற்றும் பணி தாமதமானதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று மாவட்டத்தில் திடீரென பலத்த கோடை மழை பெய்தது.

நெல் கொள்முதல் நிலையங்களில் போதிய மேற்கூரை வசதி இல்லாததால், திறந்தவெளியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தன.

முளைப்புத் திறன் பாதிக்கப்படும் என்ற அச்சத்தில், விவசாயிகள் மழையையும் பொருட்படுத்தாமல் நனைந்த மூட்டைகளைத் தார்பாய் கொண்டு மூடியும், பத்திரப்படுத்தும் பணிகளிலும் கண்ணீர் மல்க ஈடுபட்டனர். விவசாயிகள் கோரிக்கை மாவட்டத்தில் மேலும் 2 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அரசு நெல் மூட்டைகளைப் பாதுகாப்பாக வைக்க எவ்வித முன்னேற்பாடுகளையும் செய்யவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இனியாவது நெல் மூட்டைகளைப் பாதுகாக்க நிரந்தரக் கட்டிடங்கள் அல்லது போதிய பாதுகாப்புக் கருவிகளை வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.