செங்கல்பட்டில் மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு
24 Jul 2026, 12:01 am
<p><strong>செங்கல்பட்டில் மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு</strong></p><p>தில்லி மற்றும் தமிழ்நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராகப் போராடிய மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து, செங்கல்பட்டு ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக் கல்லூரியில் இந்திய மாணவர் சங்கக் கிளைச் செயலாளர் தமிழரசி தலைமையில் நடைபெற்ற வகுப்பு புறக்கணிப்பு ஆர்ப்பாட்டத்தில், மாவட்டத் தலைவர் சத்யதாஸ், மாவட்டச் செயலாளர் தயாநிதி, மாவட்டத் துணைத் தலைவர் கிருஷ்ணா, மாவட்டக் குழு உறுப்பினர் ஜெய்கணேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.</p>
