செங்கல்பட்டில் வரவேற்புக் குழு அமைப்பு செப்.19 சத்துணவு ஊழியர் சங்க மாநிலப் பேரவை!
21 Jul 2026, 9:57 pm

செங்கல்பட்டில் வரவேற்புக் குழு அமைப்பு செப்.19 சத்துணவு ஊழியர் சங்க மாநிலப் பேரவை!

செங்கல்பட்டு, ஜூலை 21 - தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநிலப் பிரதிநிதித்துவப் பேரவை செப்டம்பர் 19 அன்று செங்கல்பட்டில் நடைபெற உள்ள நிலையில், இப்பேரவையை நடத்துவதற்கான 25 பேர் கொண்ட வரவேற்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கான அமைப்புக் கூட்டம் திங்களன்று (ஜூலை 20) மாவட்டத் தலைவர் என்.சசிகலா தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலா ளர் பி. சித்ரா வரவேற்றார். மாநிலத் தலைவர் பி. செல்லதுரை நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைக்க, மாநிலப் பொதுச்செயலாளர் ஏ. ஜெசி பேரவைக்கான இலச்சினையை வெளியிட்டார்.

மாநில பிரதிநிதித்துவப் பேரவையின் வர வேற்புக்குழு தலைவராக சி. முகமது உசேன், செயலாளராக என். சசிகலா, பொருளாளராக எஸ். புஷ்பலதா ஆகியோரை உள்ளடக்கிய 25 பேர் கொண்ட வரவேற்புக் குழு அமைக்கப் பட்டது.

அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ். வசந்தகுமார், மாதர் சங்க மாவட்டச் செயலா ளர் ஜி. ஜெயந்தி, அரசு ஊழியர் சங்க மாவட்ட முன்னாள் தலைவர் கே. பூங்குழலி, கிராம உதவியாளர் சங்கத்தின் முன்னாள் பொருளாளர் ஆர். கோவிந்தன், வருவாய்த்துறை ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் கே. விக்டர் சுரேஷ் குமார், நகராட்சி மாநகராட்சி அலுவலர் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் எம். தாமோதரன், சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாநி லப் பொதுச்செயலாளர் பி. ராமமூர்த்தி ஆகி யோர் பங்கேற்றனர். சத்துணவு ஊழியர் சங்க மாவட்டப் பொருளாளர் எஸ். புஷ்பலதா நன்றி கூறினார்.