தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சென்னை முக்கிய செய்திகள்

8 Jan 2026, 2:44 pm
சென்னை  முக்கிய செய்திகள்
<p><strong>ரூ.120 கோடியில் அமைக்கப்பட்டு வரும் செங்கல்பட்டு &nbsp;புதிய பேருந்து நிலையம்</strong></p> <p>தேர்தலுக்கு முன்னரே திறக்கத் திட்டம் &nbsp;செங்கல்பட்டு, ஜன.8- செங்கல்பட்டு, ஆலப்பாக்கத்தில் ரூ.120 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் புதிய பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகளை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் ஆய்வு செய்தார். தரை மற்றும் முதல் தளங்களுடன் 50 பேருந்துகள் நிற்கும் வகையில் அமைய உள்ள இந்த நிலையத்தில், தற்போது 80 சதவீதப் பணிகள் நிறைவடைந்துள்ளன. நவீன வசதிகள், வணிக வளாகம் மற்றும் பணிமனையுடன் தயாராகி வரும் இப்பேருந்து நிலையம், மீதமுள்ள பணிகளை முடித்து விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும் என அமைச்சர் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் சினேகா மற்றும் மக்கள் பிரதிநிதிகள் உடனிருந்தனர். சர்வதேச ஜவுளி கண்காட்சி அரங்கம் அமைக்க அழைப்பு காஞ்சிபுரம், &nbsp;ஜன.8- சர்வதேச ஜவுளி தொழில் மாநாடு 2026-ம் ஆண்டு ஜனவரி 29, 30 ஆகிய தினங்களில் கோயம்புத்தூர் கொடீசியா வளாகத்தில் நடைபெற உள்ளது. இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்த மாநாட்டில் கருத்தரங்குகள் , கண்காட்சி , வாங்குபவர் மற்றும் விற்பவர் சந்திப்பு மற்றும் அழகு நயப்பு காட்சி ஆகியவை இடம்பெற உள்ளன. மேலும் சுமார் 100 காட்சியரங்குகள் கொண்ட கண்காட்சியும் நடத்தப்பட உள்ளது. இந்த கண்காட்சியில் காட்சியரங்குகள் அமைக்க விரும்பும் ஜவுளி தொழில் நிறுவனங்கள் 13.1.2026-க்குள் மதுரை மண்டல துணை இயக்குநர் அலுவலக மின்னஞ்சல் ddtextilesmdu@gmail.com. மூலம் விண்ணப்பிக்கலாம்.. &nbsp;இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதன் மூலம், வெளிநாட்டு முதலீடு மற்றும் ஏற்றுமதிகள் அதிகரித்து, தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். எனவே அனைத்து ஜவுளித் தொழில் நிறுவனங்கள் மற்றும் ஜவுளித் தொழில் சங்கங்கள் இந்த சர்வதேச மாநாட்டில் பங்கேற்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார். இந்திய ராணுவத்திற்கு பி.இ., பி.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் சென்னை, ஜன.8- இந்திய ராணுவத்தின் எஸ்.எஸ்.சி &nbsp;பிரிவில் தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் சாரா பிரிவுகளில் காலியாக உள்ள 380 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் ஆண்களுக்கு 350 இடங்களும், பெண்களுக்கு 30 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் தொடர்புடைய துறையில் பொறியியல் (B.E / B.Tech) முடித்தவர்களும், இறுதியாண்டு பயிலும் மாணவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 20 முதல் 27 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் (பிறப்பு: 1999 முதல் 2006-க்குள்). தேர்வு செய்யப்படும் லெப்டினன்ட் பதவிகளுக்கு மாதம் ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை ஊதியம் வழங்கப்படும். தகுதிப்பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஆர்வமுள்ளவர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தின் வாயிலாக வரும் பிப். 5க்குள் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் சரிபார்த்துக் கொள்ளுமாறு ராணுவ ஆட்சேர்ப்பு பிரிவு அறிவுறுத்தியுள்ளது. கஞ்சா கடத்திய வாலிபர் கைது சென்னை, ஜன.8- &nbsp;பூந்தமல்லி மதுவிலக்கு ஆய்வாளர் &nbsp;சுபாஷினி தலைமையில் எஸ்ஐ நாட்டாளம்மை மற்றும் போலீசார் புதனன்று பூந்தமல்லி பேருந்து நிலையம் எதிரே ஒருவரை பிடித்து சோதனை செய்த போது 7 கிலோ கஞ்சா சிக்கியது. &nbsp;இதையடுத்து, போலீசார் அந்த நபரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். அதில், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியைச் சேர்ந்த சிவரஞ்சன் (30) என்பது தெரிய வந்தது. இவர் வெளி மாநிலத்தில் இருந்து மொத்தமாக கஞ்சாவை வாங்கி வந்து பூந்தமல்லி பகுதியில் இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களை குறி வைத்து விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 7 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். போலீசாரின் விசாரணைக்கு பிறகு அவரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். அரசு பேருந்து - பைக் மோதல்: மாணவர் உயிரிழப்பு குன்றத்தூர், ஜன. 8- &nbsp;குன்றத்தூர் அருகே அரசு பேருந்து மீது பைக் மோதிய விபத்தில் 12 ஆம் வகுப்ப மாணவன் சரவணன் (17) உயிரிழந்தார். இரண்டாம் கட்டளை பகுதியைச் சேர்ந்த இவர், தனியார் பள்ளியில் படித்து வந்தார். செவ்வாயன்று டியூஷன் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, பல்லாவரம் சாலையில் ஆண்டாள் குப்பம் அருகே எதிரே வந்த அரசு பேருந்து மீது மாணவனின் பைக் நேருக்கு நேர் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குரோம்பேட்டை போக்குவரத்துப் புலனாய்வு பிரிவு போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.