செங்கல்பட்டில் அக்டோபர் 3-ல் நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்க மாநில மாநாடு
14 Jul 2026, 1:38 am
<p><strong>செங்கல்பட்டில் அக்டோபர் 3-ல் நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்க மாநில மாநாடு</strong></p><p>செங்கல்பட்டு, ஜூலை 13- தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சி அலுவலர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் தலை வர் கா.முருகானந்தம் தலை மையில் நடைபெற்றது. இதில், சங்கத்தின் 10-வது மாநில மாநாட்டை அக்டோபர் 3-ஆம் தேதி செங்கல்பட்டில் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது. மேலும், ஜூலை 24-ஆம் தேதி மாநிலம் முழுவதும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. பணியிட மாறுதல்கள் மற்றும் பதவி உயர்வுகளை வெளிப்படையான கலந்தாய்வு மூலம் மேற்கொள்ள வேண்டும், புதிய சட்டத்தால் பதவி உயர்வில் ஏற்பட்டுள்ள சிக்கல்களைத் தீர்க்க கல்வித்தகுதி மற்றும் தேர்வு விதிகளில் தளர்வு அளிக்க வேண்டும், ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறி வித்து கருவூலமுறை ஊதி யம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. மாநாட்டிற்கான வரவேற்புக் குழு தலைவராக க.கார்த்தி கேயன், செயலாளராக எம்.கற்பகம், பொருளாளராக எம்.பிரியா மற்றும் கவுரவத் தலைவராக ந.இளங்கோ ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.</p>
