சர்வதேச கராத்தே போட்டியில் தங்கம் வென்று அசத்திய அரசுப் பள்ளி மாணவி செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் வாழ்த்து!
8 Jun 2026, 11:13 pm
<p><strong>சர்வதேச கராத்தே போட்டியில் தங்கம் வென்று அசத்திய அரசுப் பள்ளி மாணவி செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் வாழ்த்து!</strong></p><p>செங்கல்பட்டு, ஜூன் 8- தாய்லாந்தில் நடை பெற்ற சர்வதேச கராத்தே போட்டியில் செங்கல்பட்டு மாவட்ட அரசுப் பள்ளி மாணவி தங்கப் பதக்கம் வென்று தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஒன்றி யம் ஊனமாஞ்சேரி அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வரும் மாணவி ஜெயஸ்ரீ. இவர் தாய் லாந்தில் ஒன்பது நாடுகள் பங்கேற்ற சர்வதேச கராத்தே போட்டியில் கலந்து கொண்டு திறம்பட விளையாடி தங்கப்பதக்கம் வென்றார். போட்டியில் வெற்றி பெற்றுத் திரும்பிய மாணவி ஜெயஸ்ரீ, இன்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் வீரப் பனை நேரில் சந்தித்துத் தான் வென்ற தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ்களைக் காண்பித்து வாழ்த்து பெற்றார். அடுத்ததாக, வரும் செப்டம்பர் மாதம் ஜப்பா னில் நடைபெற உள்ள, 90-க்கும் மேற்பட்ட நாடு கள் பங்கேற்கும் உலகக் கோப்பை கராத்தே போட்டி யில் கலந்து கொள்வ தற்காக மாணவி ஜெயஸ்ரீ தற்போது தீவிரப் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இந்த சர்வதேசப் போட்டி யில் வெற்றி பெறத் தனக்கு உறுதுணையாக இருந்த பிரபஞ்சம் தற்காப்பு கலை கழகத் தலைமைப் பயிற்சியாளர் சந்தன மணிக்குமார், பள்ளி ஆசிரியர் ரோஸ் அண்ணா செல்வகுமாரி, ஊராட்சி மன்றத் தலைவர், துணைத் தலைவர், பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் தனது பெற்றோருக்கு மாணவி ஜெயஸ்ரீ நெகிழ்ச்சி யுடன் நன்றி தெரிவித்து ள்ளார்.</p>
