தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நுரையீரலில் சிக்கிய திருகாணியை அகற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவர்கள் சாதனை

14 May 2026, 9:13 pm
நுரையீரலில் சிக்கிய திருகாணியை அகற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவர்கள் சாதனை

நுரையீரலில் சிக்கிய திருகாணியை அகற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவர்கள் சாதனை

செங்கல்பட்டு, மே 14- செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஓராண்டு நிரம்பிய பெண் குழந்தையின் நுரையீரலில் சிக்கியிருந்த சிறிய இரும்புத் திருகாணியை இரண்டு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு மருத்துவர்கள் வெற்றிகர மாக அகற்றி சாதனை படைத்துள்ள னர்.

நவீன மருத்துவத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி அறுவை சிகிச்சையின்றி இக்கருவி அகற்றப்பட்டதால், அக்குழந்தை தற்போது முழு ஆரோக்கியத்துடன் நலம்பெற்றுள்ளது.

செங்கல்பட்டு காமராஜர் நகரைச் சேர்ந்த ஒரு வயது பெண் குழந்தைக்குத் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதையடுத்து, பெற்றோர்கள் உடனடியாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.

குழந்தையைப்பரிசோதித்த மருத்துவமனை டீன் பிரியா பசுபதி மற்றும் மருத்துவக் குழுவினர், குழந்தையின் வலது பக்க நுரையீரலில் சிறிய திருகாணி ஒன்று சிக்கியிருப்பதைக் கண்டறிந்தனர்.

இதைத் தொடர்ந்து, குழந்தை நலப் பிரிவின் இணைப் பேராசிரியர் சரத் பாலாஜி தலைமையிலான மருத்து வக் குழுவினர், தீவிர சிகிச்சையை மேற்கொண்டனர்.

மிகவும் சவாலான இந்தச் சூழலில், குழந்தைக்குத் தழும்பு ஏற்படாத வகையில் 'மினிமலி இன்வேசிவ்' எனும் நுண்துளை முறையையும், 'பிளெக்சிபிள் பிராங்கோஸ்கோப்' கருவியையும் பயன்படுத்தி, இடுக்கிகள் மூலம் சுமார் இரண்டு மணி நேரம் போராடி அந்தத் திருகாணியை பத்திரமாக வெளியே எடுத்தனர்.

இந்தச் சிகிச்சைக்குப் பின் குழந்தையின் சுவாசம் சீரடைந்து, தற்போது அவர் முழுமையாகக் குணமடைந்துள்ளார்.

உயிர்காக்கும் சிகிச்சையைச் சரியான நேரத்தில் வழங்கிய மருத்து வர்களைச் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் நேரில் சந்தித்துப் பாராட்டு தெரி வித்தார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.