பணி நிரவலைக் கைவிட வேண்டும்: அரசு செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
13 Jul 2026, 1:46 am
<p><strong>பணி நிரவலைக் கைவிட வேண்டும்: அரசு செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p><p>செங்கல்பட்டு, ஜூலை 12- கிராமப்புறங்களில் தரமான மருத்துவ சேவையை வழங்கி வரும் திறன்மேம்பாட்டு செவிலியர் பணியிடங்கள் உள்ளிட்ட எந்தவொரு நிரந்தர செவிலியர் பணியிடங்களை யும் பணி நிரவல் செய்யும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என்று வலி யுறுத்தி, தமிழ்நாடு அரசு அனைத்து செவி லியர்கள் சங்கம் சார்பில் செங்கல்பட்டில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்டத் தலைவர் ரஞ்சினி தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் ஹேமா கோரிக்கை விளக்க உரையாற்றினார். அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நிரந்தர செவிலியர் காலிப் பணியிடங்களை உரு வாக்கி, அங்கு பணியாற்றும் எம்.ஆர்.பி. ஒப்பந்த செவி லியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும், கிராமப்புற மக்களுக்குத் தடையற்ற மருத்துவ சேவை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் சங்கத்தினர் வலியுறுத்தினர். இந்த நிகழ்வில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செய லாளர் சே.வசந்தகுமார் சிறப்புரையாற்றினார். சங்க நிர்வாகிகள் சதீஷ்குமார், ஆனந்தராஜ், மார்ட்டின், மகேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கைகளை வலி யுறுத்தினர்.</p>
