கொள்முதல் செய்த நெல்லுக்கு உடனே பணம் தரக்கோரி விவசாயிகள் கோரிக்கை
23 May 2026, 12:15 am

கொள்முதல் செய்த நெல்லுக்கு உடனே பணம் தரக்கோரி விவசாயிகள் கோரிக்கை

செங்கல்பட்டு, மே 22- செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் மாலதி ஹெலன் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில், தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு மூலம் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு மாதக்கணக்கில் பணம் வழங்காமல் தாமதிக்கும் ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கூட்டத்தில், மத்திய அரசின் நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் செயல்படும் கொள்முதல் நிலையங்களில் நெல் வழங்குமாறு விவசாயிகள் கட்டாயப்படுத்தப்படுவதாகவும், ஆனால் அதற்கான தொகை உடனடி யாக வழங்கப்படாமல் அலட்சியப்படுத்தப் படுவதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டி கூச்சலிட்டனர்.

இதனால் ஏற்பட்ட பரபரப்பைத் தொடர்ந்து, இது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ் குமார் உறுதியளித்தார்.

மேலும், காட்டுப்பன்றி களை கட்டுப்படுத்துதல் மற்றும் பாசன கால்வாய்களை தூர்வாருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளையும் விவசாயிகள் இக்கூட்டத்தில் வலியுறுத்தினர்.