அறுவடை செய்த நெல்லை விரைந்து கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை
15 May 2026, 12:58 am

அறுவடை செய்த நெல்லை விரைந்து கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை

செங்கல்பட்டு, மே 14- செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு ஒன்றியங்களில் 171 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வரும் நிலை யில், அறுவடை செய்த நெல்லை அரசு விரைவாகக் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நடப்பாண்டில் கூடுதல் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டுள்ளதால், தற்போதைய தேவையை கருத்தில் கொண்டு கூடுதல் கொள்முதல் நிலையங்களை அமைக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்

. குறிப்பாக, கொள்முதல் நிலையங்களில் பல நாட்கள் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுவதாலும், தற்போது திடீர் மழை பெய்து வருவ தாலும் நெல் மூட்டைகள் நனைந்து சேத மடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே, வானிலை மாற்றத்தைக் கருத்தில் கொண்டு, விவசாயிகளின் உழைப்பு வீணா காத வண்ணம் நெல் கொள்முதலைத் துரிதப்படுத்த வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.