விவசாய நிலங்களைச் சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளைச் சுட்டுப் பிடிக்க நடவடிக்கை வேண்டும் விவசாயிகள் கோரிக்கை
5 hours before

விவசாய நிலங்களைச் சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளைச் சுட்டுப் பிடிக்க நடவடிக்கை வேண்டும் விவசாயிகள் கோரிக்கை

மதுராந்தகம், நவ. 14-செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 8 ஒன்றியங்களில் 1.67 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இப்பகுதிகளில் நெல், கரும்பு மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வரும் நிலையில், காட்டுப்பன்றிகளின் இனப்பெருக்கம் அதி

கரித்து விளைநிலங்களைச் சேதப்படுத்துவ தால் விவசாயிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

செங்கல்பட்டு, மதுராந்தகம், லத்தூர், சித்தாமூர், திருக் கழுக்குன்றம், திருப்போரூர், காட்டாங்கொளத்தூர், புனித தோமை யர் மலை ஆகிய ஒன்றியங்கள் மற்றும் செய்யூர் வட்டாரப் பகுதிகளில் கூட்டம் கூட்டமாகப் புகும் காட்டுப்பன்றிகள், நாற்றங்கால், நெற்பயிர், கரும்பு, தோட்டக்கலைப் பயிர்கள் மற்றும் சொட்டு

நீர் பாசனக் கட்டமைப்புகளைச் சேதப்படுத்தி வருகின்றன. மேலும், கிராமங்க

ளுக்குள்ளும் புகுந்து அட்டகாசம் செய்கின்றன. இதனால் ஏற்படும் பாதிப்பு களுக்கு அரசு சார்பில் உரிய நிவாரணம் கிடைப்பதில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து அச்சிறுப்பாக்கம் ஒன்றி

யம் சுக்கன்கொள்ளை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி விட்டர் தாஸ் கூறுகை

யில், செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் காட்டுப்பன்றிகள் விளைநிலங்களை அழிப்பதால், விவசாயிகள் வேறு வழியின்றி சவுக்கு பயிரிடத் தொடங்கியுள்ளனர் என்றும், காட்டுப்பன்றிகளைச் சுடத் தமிழக அரசு அனுமதி வழங்கி, வனத்துறை அதி காரி, உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் விவ சாயிகள் அடங்கிய 17 பேர் கொண்ட குழு

அமைக்க உத்தரவிட்டும், ஒன்றரை

ஆண்டுகளாக எவ்வித நட வடிக்கை

யும் எடுக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினார். எனவே, விவசாயிகளின் வாழ்வா தாரத்தைக் காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என

அவர் வலியுறுத்தினார்.

இதற்கிடையே, செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருப்போரூர், திருக்கழுக்குன்றம், வண்டலூர் ஆகிய 5 வனச்சரகங்களில் 42,650 ஏக்கர் வனப்பகுதி உள்ளதாகவும், பாதிப்புள்ள கிராமங்களில் ஊராட்சித் தலைவர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வனத்துறை அதிகாரிகள் அடங்கிய குழு கண்காணித்து வருவதாகவும் வனத்துறை அலு வலர்கள் தெரிவித்தனர். மேலும், காப்புக்காடுகளில் இருந்து 1 கி.மீ. தூரத்திற்குள் பன்றிகளைச் சுட அனுமதியில்லை என்றும், 3 கி.மீ. தூரத்தில் சேதம் விளைவித்தால் பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என்றும், 5 கி.மீ. தூரத்திற்கு அப்பால் உள்ள பன்றி

களைச் சுட மட்டுமே அனுமதி யுள்ளதாகவும் குறிப்பிட்ட அவர்கள், விவசாயிகள் புகார் அளிக்கும்போது சென்று பார்த்தால் பன்றிகள் அங்கிருப்பதில்லை என்றாலும் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் கூறினர்.