தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

செங்கல்பட்டில் எல் நினோ தாக்கம் கருகி வரும் 200 ஏக்கர் நெற்பயிர்கள் விவசாயிகள் கடும் வேதனை

15 Jul 2026, 11:22 pm
செங்கல்பட்டில் எல் நினோ தாக்கம் கருகி வரும் 200 ஏக்கர் நெற்பயிர்கள்  விவசாயிகள் கடும் வேதனை
<p><strong>செங்கல்பட்டில் எல் நினோ தாக்கம் கருகி வரும் 200 ஏக்கர் நெற்பயிர்கள் விவசாயிகள் கடும் வேதனை</strong></p><p>செங்கல்பட்டு, ஜூலை 15- பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள ‘எல் நினோ’ நிகழ்வின் காரணமாக, இந்த ஆண்டு காலநிலையில் கடுமை யான மாற்றங்கள் ஏற்படும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தென்மேற்கு பருவமழை பெரும் பாதிப்புக்குள்ளாகும் எனத் தெரிவித் துள்ள நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் தற்போது கடும் வெப்ப அலையும், வெயிலின் தீவிரமும் விவ சாயிகளிடையே பெரும் அச்சத்தை ஏற் படுத்தியுள்ளது. கருகும் பயிர்கள் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஆனூர், கோரப்பட்டு, புன்னப்பட்டு, ஆலவாய் மற்றும் சாலூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில், சுமார் 200 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள், கடு மையான வெப்ப அலையின் தாக்கத் தால் கருகத் தொடங்கியுள்ளன. தண்ணீர் பற்றாக்குறை மற்றும் வெப்பத்தின் கோரத்தாண்டவத்தால் பயிர்கள் காய்ந்து கருகி வருவதைக் கண்டு விவசாயிகள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். விவசாயிகளின் கண்ணீர் ஆனூர் கிராமத்தைச் சேர்ந்த விவ சாயி கோவிந்தன் கூறுகையில், “பல ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி சுமார் ஆறு ஏக்கர் நிலத்தில் நெல் சாகுபடி செய்துள்ளேன். தற்போது கடும் வெப்ப அலை மற்றும் நீர் பற்றாக்குறை யால் பயிர்கள் அனைத்தும் கருகி வரு கின்றன. முதலீடு செய்த தொகையை எப்படி மீட்பது, வாங்கிய கடனுக்கு வட்டி கட்டுவது எப்படி, குடும்பத்தின் அன்றாட உணவுத் தேவைக்கு என்ன செய்வது என்று தெரியாமல் மிகுந்த வேதனையில் இருக்கிறேன்,” என்று கண்ணீருடன் தெரிவித்தார். அரசுக்குக் கோரிக்கை தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ள விவசாயிகளுக்கு, மாவட்ட வேளாண்மைத் துறை உடனடியாக களத்தில் இறங்கி ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள் ளது. பாதிக்கப்பட்ட நிலங்களை நேரில் ஆய்வு செய்து, உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், பயிர் காப்பீட்டுத் தொகையை விரைவாகப் பெற்றுத் தர மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் போர்க்கால அடிப் படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலி யுறுத்தியுள்ளனர். இயற்கை பேரிடர் மற்றும் வானிலை மாற்றங்களால் ஏற்படும் இந்தப் பாதிப்பு, அப்பகுதி விவசாயிகளின் பொருளாதாரத்தை வெகுவாகப் பாதித் துள்ளதால், அரசு உடனடித் தலையீடு செய்ய வேண்டியது அவசியமாகிறது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.