தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் 4 மையங்களில் மறியல் போராட்டம்

10 Aug 2026, 11:54 pm
செங்கல்பட்டு மாவட்டத்தில் 4 மையங்களில் மறியல் போராட்டம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் 4 மையங்களில் மறியல் போராட்டம்

செங்கல்பட்டு, ஆக.10ஒன்றிய அரசின் மக்கள் விரோத தொழிலாளர் விரோத கொள்கைகளுக்கு எதிராக செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற மறியல் போராட்டங்களில் சிஐடியு, விவசாயத் தொழிலாளர் சங்கம், விவசாயிகள் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

சித்தாமூர்

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், சித்தாமூரில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ். ரவி தலைமை வகித்தார்.

இந்தப் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செய்யூர் வட்டச் செயலாளர் புருஷோத்தமன், மாவட்டக்குழு உறுப்பினர் எம். வெள்ளிக்கண்ணன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஜி. ஜெயந்தி, சிஐடியு மாவட்டத் துணைத் தலைவர் ஈ. ராமமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மதுராந்தகம்

மதுராந்தகம்

மாநில வங்கி முன்பாக நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு சிஐடியு மாவட்டத் தலைவர் பி. மாசிலாமணி தலைமை வகித்தார். போராட்டத்தில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் பாரதி அண்ணா, விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் வி. அரிகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருப்போரூர்

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் ஜி. மாரி தலைமை வகித்தார். போராட்டத்தை சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் நம்புராஜன் தொடங்கி வைத்தார். இதில் சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எம். செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.