பாதாள சாக்கடை திட்டத்தால் சேதமடைந்த சாலைகள்: சீரமைக்க கோரும் சிபிஎம்
3 Jun 2026, 12:28 am
<p><strong>பாதாள சாக்கடை திட்டத்தால் சேதமடைந்த சாலைகள்: சீரமைக்க கோரும் சிபிஎம்</strong></p><p>செங்கல்பட்டு, ஜூன் 2- செங்கல்பட்டு நகராட் சிப் பகுதியில் பாதாள சாக்கடைத் திட்டத்திற்காகத் தோண்டப்பட்ட சாலை களை உடனடியாகச் சீர மைக்க வேண்டும் எனப் பொதுமக்களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கல்பட்டு நகராட்சி யின் 33 வார்டுகளிலும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ரூ.152 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டன. மூன்று ஆண்டுகள் நடை பெறவுள்ள இத்திட்டத்தின் முதலாண்டு நிறைவடைந் துள்ளது. ஆனால், பணி களைப் பகுதி வாரியாக முடிக்காமல், நகரம் முழுவ தும் ஆங்காங்கே சாலை களைத் தோண்டி குழாய் கள் பதிக்கப்பட்டு வருகின் றன. அவ்வாறு தோண்டப் பட்ட பள்ளங்கள் முறை யாக மூடப்படாததால் அடிக் கடி விபத்துகள், மண் சரிவு மற்றும் போக்குவரத்து நெரி சல் ஏற்பட்டுப் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வரு கின்றனர். இதன் ஒரு பகுதியாக, செங்கல்பட்டின் முக்கியப் பகுதியான வேதாச்சலம் நகரில் செவ்வாயன்று 10 டன் தண்ணீர் கேன்களை ஏற்றி வந்த லாரி ஒன்று, சரி யாக மூடப்படாத பள்ளத் தில் சிக்கியதால் அப்பகுதி யில் கடுமையான போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது. வருகிற ஜூன் 4-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப் படவுள்ள நிலையில், பள்ளி மாணவர்கள் சென்று வரு வதில் பெரும் சிரமம் ஏற்படும் எனப் பெற்றோர் அச்சமடை ந்துள்ளனர். எனவே, பணி களைத் தீவிரப்படுத்தி, தோண்டப்பட்ட சாலை களைப் பகுதி வாரியாக உடனடியாகச் சீரமைக்க வேண்டும் எனச் செங்கல் பட்டு நகரவாசிகளும், சிபிஎம் வலியுறுத்தியுள் ளனர்.</p>
