தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஆட்சியர் அலுவலக குறைதீர் கூட்டம் கூடுதல் இருக்கைகள் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை!

2 Nov 2026, 11:32 pm
ஆட்சியர் அலுவலக குறைதீர் கூட்டம் கூடுதல் இருக்கைகள் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை!

ஆட்சியர் அலுவலக குறைதீர் கூட்டம் கூடுதல் இருக்கைகள் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை!

செங்கல்பட்டு, நவ.2-செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் மு.வீரப்பன் தலைமையில் திங்களன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், பட்டா, முதியோர் உதவித்தொகை, நெல்லுக்கான நிலுவைத்தொகை, ஏரி-குளங்களை தூர்வாருதல் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 474மனுக்கள்

பெறப்பட்டு துறை சார்ந்த நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டன.

மேலும், 3 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.16,500 மதிப்பிலான உபகரணங்களும், அமீரகத்தில் உயிரிழந்த கார்த்திகேயன் என்பவரின் குடும்பத்திற்கு ரூ.49,532 காசோலையும் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ஃபர்ஹத் பேகம், மாவட்ட ஊரக வளர்ச்சித்திட்ட இயக்குநர் ஸ்ருதி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இதனிடையே, ஒவ்வொரு வாரமும் 400-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வரும்நிலையில், கூட்ட அரங்கில் போதிய இருக்கை வசதி இல்லாததால் முதியவர்களும் பெண்களும் நீண்ட நேரம் காத்திருந்தும் தரையில் அமர்ந்தும் அவதியுற்று வருகின்றனர். எனவே, மனுக்களைப் பதிவுசெய்யத் டோக்கன் முறை அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்றும், பொதுமக்கள் அமர கூடுதல் இருக்கைகள் அமைக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.