தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

செங்கல்பட்டு - அரக்கோணம் இடையே புதிய இரட்டை ரயில் பாதைக்கு ரயில்வே ஒப்புதல்

20 May 2026, 1:30 am
செங்கல்பட்டு - அரக்கோணம் இடையே  புதிய  இரட்டை ரயில் பாதைக்கு  ரயில்வே ஒப்புதல்
<p><strong>செங்கல்பட்டு - அரக்கோணம் இடையே புதிய இரட்டை ரயில் பாதைக்கு ரயில்வே ஒப்புதல்</strong></p><p>சென்னை, மே 19- செங்கல்பட்டு - அரக்கோணம் இடையே போக்குவரத்து நெரிசல் மற்றும் காலதாமதத்திற்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், ரூ.933 கோடி மதிப்பீட்டில் புதிய இரட்டை ரயில் பாதை அமைக்க மத்திய ரயில்வே வாரியம் அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது. அரக்கோணம் முதல் செங்கல்பட்டு வரையிலான 68 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமையவுள்ள இந்த அதிநவீன இரட்டை வழிப்பாதை மூலம், இந்தத் தடத்தில் தினசரி இயக்கப்படும் ரயில்களின் எண்ணிக்கை 13-லிருந்து 40 ஆக உயர்த்தப்பட உள்ளது. தற்போது ஒற்றை ரயில் பாதை மட்டுமே உள்ளதால் பாலூர், வாலா ஜாபாத் மற்றும் காஞ்சிபுரம் போன்ற முக்கிய நிலையங்களில் எதிரே வரும் ரயில்களுக்காகப் பயணிகள் ரயில்கள் பல மணி நேரம் காத்திருக்கும் அவல நிலை இனி முற்றிலும் நீங்கும். இந்த புதிய வழித்தடத்தின் மூலம், சென்னை கடற்கரை வழியாகச் சுற்றிச் செல்லாமல் தக்கோலம் வழியாக நேரடியாகச் செல்லும் பிரத்யேக புற நகர் ரயில் சேவையை இயக்க வழி வகை ஏற்படும் என்பதால் பயண நேரம் கணிசமாகக் குறையும். மேலும், காஞ்சிபுரம் மற்றும் வாலாஜாபாத் சுற்றி யுள்ள சிப்காட் தொழிற்பேட்டைகளின் சரக்கு போக்குவரத்து வேகமெடுத்து பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். தென் மாவட்டங்களிலிருந்து திருப் பதி செல்லும் ரயில்கள், சென்னை சென்ட்ரல் செல்லாமல் செங்கல்பட்டு மற்றும் அரக்கோணம் வழியாக எஞ்சின் திசையை மாற்றாமல் நேரடி யாகச் செல்ல முடியும் என்பதால் பயணி களுக்கு சிறந்த மாற்றாக அமையும் என கூறப்படுகிறது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.