தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் எல்.எச்.பி. வகை கூடுதல் பெட்டிகளுடன் இயக்கப்படுமா? டெல்டா-தென் மாவட்டங்களின் ரயில் பயணிகள் எதிர்பார்ப்பு

7 May 2026, 12:19 am
செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் எல்.எச்.பி. வகை  கூடுதல் பெட்டிகளுடன் இயக்கப்படுமா? டெல்டா-தென் மாவட்டங்களின் ரயில் பயணிகள் எதிர்பார்ப்பு

செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் எல்.எச்.பி. வகை கூடுதல் பெட்டிகளுடன் இயக்கப்படுமா? டெல்டா-தென் மாவட்டங்களின் ரயில் பயணிகள் எதிர்பார்ப்பு

கும்பகோணம், மே 6 - செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் எல்.எச்.பி. வகை பெட்டிகளுடன் இயக்கப் படுமா? என்று பயணிகள் எதிர்பார்க் கிறார்கள்.

தஞ்சை, கும்பகோணம் வழித்தடத் தில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் தினசரி ரயிலாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் அறிமுகம் செய்யப்பட்ட நாள் முதல் பயணிகள் அதிகளவில் பயணித்து வருகிறார்கள்.

இந்த ரயி லுக்கான முன்பதிவு தொடங்கிய நாளி லேயே முடிந்துவிடும். தஞ்சை-சென்னை இடையே இந்த ரயில் பகல்நேர ரயிலாக இயங்குவதால் டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த பய ணிகள் சென்னை சென்று வர மிக வசதி யாக இருக்கிறது.

அதேபோல் டெல்டா மாவட்டங்களில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்ல ஒரே இரவுநேர தினசரி ரயிலாக இருப்பதால் இந்த ரயிலில் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த ரயில் தற்போது 3 ஏ.சி. பெட்டி கள், 9 படுக்கை வசதி மற்றும் 4 முன் பதிவில்லா பெட்டி 2 மாற்றுத் திறனாளி களுக்கான பெட்டிகள் என 18 பெட்டி களுடன் இயக்கப்பட்டு வருகிறது.

மெயின் லைன் பாதையில் இயங்கும் ரயில்களில், பயணிகள் வரவேற்பு கொண்ட ரயில்களில் ஒன்றாகவும் இது இருக்கிறது.

இந்த ரயிலில் தனி முன்பதிவு ஒதுக்கீடு தஞ்சையில் இருந்து கும்ப கோணம் வரை நீட்டிக்கப்பட்டதால், இங்கிருந்து தென் மாவட்டம் செல்லும் பயணிகள் மிகவும் பயனடைந்துள்ள னர். இது நிரந்தர ரயிலாகவும், அதிக பயன்பாட்டை கொண்ட ரயிலாக வும் இருப்பதால் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும், பழைய பெட்டி களை மாற்றி விட்டு நவீனமாக்கப்பட்ட பெட்டிகளை இணைக்க வேண்டும் என்று டெல்டா மாவட்ட பயணிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வரு கின்றனர்.

கூடுதல் பெட்டிகள் இதுகுறித்து தஞ்சை மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தினர் கூறுகை யில், “சென்னையுடன் தென் மாவட்டங் களை இணைக்கும் முக்கிய ரயில்களில் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலும் ஒன்று. மெயின் லைன் பாதையில் பயணிகள் வரவேற்பை கொண்ட இந்த ரயிலில் அனைத்து டிக்கெட்டுகளும் விரைவில் விற்று தீர்ந்து விடுகின்றன.

முன்பதி வில்லா பெட்டிகளில் எப்போதும் மக்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக் கிறது. ஏற்கனவே தென் மாவட்ட பயணி கள் செந்தூர் ரயிலில் கூடுதல் பெட்டி கள், நவீனமாக்கப்பட்ட பெட்டிகள் இணைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால் திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் நடைமேடை சிறியதாக உள்ளது. இத னால் கூடுதல் பெட்டிகள் இணைக்க சிரமமாக இருப்பதாக ரயில்வே அதி காரிகள் தெரிவித்தனர். எல்.எச்.பி. வகை பெட்டி மேலும் கடந்த ஆண்டு ரயில்வே பொது மேலாளர் செந்தூர் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க நடவ டிக்கை எடுக்கப்படும் என்றார்

. ஆனால் இதுவரை அந்த நடவடிக்கை மேற் கொள்ளப்படவில்லை. செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலை எல்.எச்.பி. வகை பெட்டிகளுடன் இயக்கும் போது 10 சதவீதம் வரை கூடுதலாக இருக்கைகள் அதிகரிக்கும். இதனால் பயணிகள் ஓரளவு பயனடைவார்கள்.

சென்னையில் இருந்து திருச்செந்தூ ருக்கு செல்லும் ஒரே நேரடி ரயில் என்ப தால் இந்த ரயிலில் எப்போதும் கூட்ட நெரிசல் இருக்கத்தான் செய்கிறது.

பயணிகள் வசதி கருதி மயிலாடு துறையில் இருந்து கும்பகோணம், பாபநாசம், தஞ்சை, திருச்சி வழியாக கோடை கால சிறப்பு ரயில்கள் இயக்கப்பட வேண்டும். மீட்டர் கேஜ் பாதையில் இயக்கப்பட்ட சென்னை-தூத்துக்குடி ஜனதா எக்ஸ்பிரஸ் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என ரயில் பயணிகள் வேண்டுகோள் விடுத் துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.