கடலூர் அரசு மருத்துவமனையில் கீமோதெரபி சிகிச்சை தொடக்கம்
2 Nov 2026, 11:19 pm

கடலூர் அரசு மருத்துவமனையில் கீமோதெரபி சிகிச்சை தொடக்கம்

சிதம்பரம்,நவ.2-சிதம்பரத்தில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோயாளிகளுக்கான கீமோதெரபி மற்றும் பகல்நேர வேதிச்சிகிச்சை சேவைகள் தொடங்கப் பட்டுள்ளன.

இதன் மூலம் நோயாளிகள் மருத்துவக் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று அன்றைய தினமே வீடு திரும்பலாம். மேலும், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தகுதியுடைய பயனாளி களுக்கு அங்கீகரிக்கப்பட்ட புற்றுநோய் சிகிச்சைகள் கட்டணமின்றி வழங்கப் படும்.

இதனால் கடலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி நோயாளிகள் தொலைதூர மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டிய அவ சியம் குறைவதுடன், பயணச் செலவும் குறையும். சிகிச்சை பெறவிரும்புவோர் மருத்துவ மனையின் கதிர்வீச்சு புற்று நோயியல், அறுவைச் சிகிச்சை புற்றுநோயியல் மற்றும் அறுவைச் சிகிச்சைத் துறைகளை அணுகி ஆலோசனை பெறலாம்.