தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நீலகிரிக்குள் நுழையும் வாகனங்களில் சோதனை

11 Nov 2025, 3:41 pm
நீலகிரிக்குள் நுழையும் வாகனங்களில் சோதனை
<p><strong>நீலகிரிக்குள் நுழையும் வாகனங்களில் சோதனை</strong></p> <p>மே.பாளையம், நவ.11- மேட்டுப்பாளையம் வழியே நீலகிரிக்குள் செல் லும் வாகனங்கள் அனைத் தும் காவல்துறையினரின் சோதனைக்கு பின்னரே அனு மதிக்கப்பட்டு வருகின்றன. &nbsp;நாட்டின் தலைநகர் தில்லி ரெட்போர்ட் பகுதியில் திங்க ளன்று மாலை நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு மற்றும் &nbsp;உயிரிழப்பு சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்ப டுத்தியது. இதனால் மக்கள் கூடும் இடங்கள் மற்றும் மாநில, மாவட்ட எல்லைகளில் பாதுகாப்பும் கண்காணிப்பும் பலப்ப டுத்தப்பட்டது. அதன்ஒருபகுதியாக நீலகிரி மலையின் அடி வாரத்தில் அமைந்துள்ள மேட்டுப்பாளையத்தில் திங்களன்று இரவு முதலே வாகன சோதனைகள் நடைபெற்று வருகின் றன. இதனை நள்ளிரவு கோவை மாவட்ட காவல்துறை கண்கா ணிப்பாளர் கார்த்திகேயன் நேரில் ஆய்வு செய்த நிலையில், குன்னூர், உதகை போன்ற சுற்றுலா செல்லும் வாகனங்களை தணிக்கை செய்ய கல்லார் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இ.பாஸ் சோதனை மையத்தில் உள்ள காவல்துறை சோத னைச்சாவடியில் தற்போது வாகனங்கள் ஆய்வு செய்யப் பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகிறது. கார் உள்ளிட்ட &nbsp;வாகனங்களில் பயணிக்கும் நபர்கள் அவர்கள் நீலகிரிக்கு &nbsp;செல்லும் காரணம் கேட்டறியப்பட்டு, வாகனங்களில் உள்ள &nbsp;பொருட்கள் காவல்துறையினரால் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோன்று கோவை ரயில் நிலையம், பேருந்து நிலை யம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் கோவை மாநகர வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு நிபு ணர்கள் உதவியுடன் நடைமேடைகள், இரு சக்கர வாகனம் நிறுத்துமிடங்கள், கொரியர் பிரிவு ஆகிய இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மேலும் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் கடும் சோதனைக்கு பின்னரே உள்ளே &nbsp;அனுமதிக்கப்பட்டனர். நடைமேடையில் காத்திருந்த பயணி களின் உடைமைகள் முழுமையாக சோதனையிடப்பட்டது. அதேபோல் கோவை மாநகரில் இரவு நேர பாதுகாப்பு பணி யில் சுமார் 300 போலீசார் பாதுகாப்பு பணியில் வழக்கமாக ஈடுபடுத்தப்பட்டு வரும் நிலையில், தில்லி சம்பவம் எதி ரொலியாக 600 போலீசார் முக்கிய சாலைகள், கடை வீதிகளில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.