சோதனைச்சாவடி திறப்பு
31 Dec 2025, 3:37 pm
<p><strong>சோதனைச்சாவடி திறப்பு'</strong></p>
<p>கோவை, டிச.31- கோவை - கேரளா எல்லைப் பகுதிகளில் புதிய காவல் சோதனைச் சாவடியை மாவட்ட காவல் கண் காணிப்பாளர் கார்த்திகேயன் திறந்து வைத்தார். கோவை - கேரளா எல்லையான வாளையாறு, வேலந்தாவளம் வழியாக தினமும் ஏராளமான வாக னங்கள் வந்து செல்கிறது. இதில் கோவையிலிருந்து கேரளா செல்லும் தங்க நகை வியாபாரிகளை குறி வைத்து அடிக்கடி வழிப்பறி மற்றும் ஹவாலா கடத்தல் சம்பவங்களும் நடைபெற்று வந்தது. இதனை தடுக் கும் வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு எட்டி மடை பகுதியில் புதிய சோதனைச் சாவடி அமைக்கப் பட்டு கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டது. அதன் அடிப் படையில் இதுவரை சுமார் ரூ.2 கோடி அளவிற்கான ஹவாலா பணம் பிடிபட்டுள்ளது. மேலும் பல வழிப் பறி சம்பவங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்நிலை யில் மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பை தீவிரப் படுத்தும் வகையில் தனியார் தன்னார்வ தொண்டு நிறு வன நிதி பங்களிப்போடு கோவை - கேரளா எல்லை யான வாளையாறு, வலுக்கல் ஆகிய 2 எல்லைகளி லும் அதிநவீன கேமரா உள்ளிட்ட வசதிகளுடான புதிய சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டது. இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் புத னன்று நேரில் ஆய்வு மேற்கொண்டு பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். மேலும் வாளையாறு பகுதியில் ஏ.என்.ஆர் கேமரா பொருத்தப்பட உள்ளது. மேலும் இந்த இரண்டு சோதனைச் சாவடிகளிலும் 24 மணி நேரமும் போலீசார் கண்காணிப்பு பணியில் இருப்ப தோடு, வாகன சோதனைகளிளும் ஈடுபடவுள்ளனர்.</p>
