தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சேகுவேரா பிறந்த நாள்: அரசு பள்ளி தூய்மைப்படுத்தும் பணி

16 Jun 2026, 12:08 am
சேகுவேரா பிறந்த நாள்: அரசு பள்ளி தூய்மைப்படுத்தும் பணி

சேகுவேரா பிறந்த நாள்: அரசு பள்ளி தூய்மைப்படுத்தும் பணி

கோவை, ஜூன் 15– சேகுவேரா பிறந்த நாளை முன் னிட்டு, அரசுப் பள்ளி தூய்மைப்படுத் தும் சமூகப் பணியில் இந்திய ஜனநா யக வாலிபர் சங்கத்தினர் ஈடுபட்டனர்.

உலகப் புரட்சியாளர் தோழர் சேகு வேராவின் பிறந்த நாளை முன்னிட்டு, கோவை மாவட்டம், சூலூர் தாலுகாவுக் குட்பட்ட வஞ்சிபுரம் கிளையின் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியைச் சுத்தம் செய்து உழைப்பு தானம் வழங்கும் நிகழ்வு ஞாயிறன்று நடைபெற்றது.

பள்ளி வளாகத்தைத் தூய்மைப் படுத்தும் இந்த சமூகப் பணியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட் டச் செயலாளர் தினேஷ் ராஜா, சூலூர் தாலுகா செயலாளர் எஸ்.குரு சாரதி, தாலுகா துணைத் தலைவர் ஏ.சந்திர லேகா மற்றும் கிளைச் செயலாளர் சதீஷ் குமார், முன்னாள் நிர்வாகிகள் ஆனந் தன், செல்வகுமார், ரவிச்சந்திரன் மற் றும் கிளை உறுப்பினர்கள், அப்பகுதி யைச் சேர்ந்த பெண்கள் எனப் பலரும் ஆர்வத்துடன் பங்கேற்று பள்ளி வளா கத்தைச் சுத்தம் செய்து உழைப்பு தானம் செலுத்தினர்.

இந்தியா ஜனநாயக வாலிபர் சங்க பெரிய நாயக்கன் பாளையம் ஒன்றியக் குழு சார்பில், புரட்சியாளர் சேகுவேரா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி ஒன்றியத் தலைவர் தண்டபாணி தலை மையில் நடைபெற்றது. இதில், மாவட் டத் தலைவர் என்.ராஜா சிறப்புரையாற் றினார். ஒன்றியக் குழு பொறுப்பாளர் முத்துமுருகன், ஒன்றியச் செயலா ளர் அ.பிரகதீஸ்வ ரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.

இதேபோன்று இந்திய மாணவர் சங்கம் சார்பில் கோவை மாவட்ட குழு அலுவலகத் தில் சேகுவேரா வின் பிறந்தநாள் விழா சங்க மாவட்டத் தலை வர் பாவெல் தலை மையில் நடைபெற் றது.

இதில் பலர் கலந்து கொண்டு சேகுவேராவின் புரட்சிகர சிந்தனை கள் மற்றும் இளை ஞர்களுக்கான அவரது பங்களிப்பு களை நினைவு கூர்ந்தனர்.

சேலம் புரட்சியாளர் சேகுவேரா மற்றும் பிடல் காஸ்ட்ரோ நூற்றாண்டு விழா கஜல் நாயக்கன்பட்டி பகுதியில் உள்ள ஏபிடி பார்சல் சர்வீஸ் நுழைவாயில் முன்பு சிஐ டியு ஏபிடி கிளை சார்பில் ரவீந்திரநாத் தலைமையில் நடைபெற்றது.

தலை மைச் சங்கத்தின் தலைவர் க. செவந்தி யப்பன், மாநகரக் கிழக்கு விசைத்தறி நிர் வாகி பச்சமுத்து ஆகியோர் உரை யாற்றினார். இந்நிகழ்ச்சியில் பங் கேற்ற தலைவர்கள், ஏபிடி நிர்வாகத் தில் சம்பள பேச்சு வார்த்தையை உடன டியாக பேசி முடிக்க வேண்டும்.

தொழி லாளர்களின் அடிப்படை கோரிக்கை கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதில், தலைமைச் சங்க நிர்வாகிகள் ஆர்.கதிர்வேல். எஸ்.பி.சரவணகுமார். கே.செந்தில்குமார், மாரிமுத்து பன்னீர்செல்வம், செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.