தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சே குவேரா பிறந்த நாள் தமிழகம் முழுவதும் சிபிஎம் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கங்கள்

14 Jun 2026, 9:12 pm
சே குவேரா பிறந்த நாள்  தமிழகம் முழுவதும் சிபிஎம் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கங்கள்

சே குவேரா பிறந்த நாள் தமிழகம் முழுவதும் சிபிஎம் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கங்கள்

சோசலிச சமூகத்தை அழிக்க முடியாது என்பதை மீண்டும் கியூபா நிரூபிக்கும் : கே.பாலகிருஷ்ணன்

சென்னை, ஜூன் 14- உலகத்தையே ஆட்டிப் படைக்கும் அமெரிக்க ஏகாதி பத்தியத்தின் கொடூரமான பொரு ளாதார நெருக்கடிகளையும் அரா ஜகங்களையும் முறியடித்து, சோசலிச சமூகத்தை அழிக்க முடி யாது என்பதை கியூபா மக்கள் மீண்டும் உலகிற்கு நிரூபிப்பா ர்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி பிரகடனப்படுத்தி யுள்ளது.

உலக ஏகாதிபத்திய எதிர்ப் பின் உலகளாவிய அடையாள மான புரட்சியாளர் சேகுவேரா வின் பிறந்த தினம் மற்றும் கியூப புரட்சித் தலைவர் பிடல் காஸ்ட் ரோவின் நூற்றாண்டு விழாவை யொட்டி அமெரிக்க ஏகாதி பத்தியத்திற்கு எதிராக கியூப ஆத ரவு இயக்கத்தை நடத்த மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறை கூவல் விடுத்திருந்தது.

“கடைசி கியூபக் குடிமகனின் கடைசிச் சொட்டு ரத்தம் இருக்கும் வரை போராடுவோம், ஒருபோதும் சரணடைய மாட்டோம்” என்ற கியூப மக்களின் வீரமிக்க போராட்டத்திற்கு ஆதரவாக, ஞாயிற்றுக்கிழமையன்று (ஜூன் 14) தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மாபெரும் பொதுக்கூட்டங்கள், கருத்தரங்கு கள் மற்றும் புகைப்படக் கண் காட்சிகள் உணர்ச்சிப்பூர்வமாக நடைபெற்றன.

கடலூரில் ஏகாதிபத்திய எதிர்ப்புப் பொதுக்கூட்டம்

இதன் ஒரு பகுதியாக, சிபிஎம் கடலூர் மாவட்டக் குழு சார்பில் கடலூரில் நடைபெற்ற ஏகாதி பத்திய எதிர்ப்பு இயக்க பொதுக் கூட்டத்தில், கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் பங்கேற்று ‘ஏகா திபத்திய எதிர்ப்புப் போரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி’ என்ற தலைப்பில் உரை யாற்றினார்.

“அமெரிக்க ஏகாதிபத்தியம் பிடல் காஸ்ட்ரோவைக் கொலை செய்ய 600 முறைக்கும் மேல் சதித் திட்டம் தீட்டியும், அதை யெல்லாம் முறியடித்து அமெரிக் காவிற்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர் அவர். 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தி யாவை அமெரிக்காவிடம் நரேந்திர மோடி அடிபணிய வைத்துள்ளார்.

ஆனால், வெறும் 1 கோடியே 10 லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட சிறிய நாடான கியூபாவை 60 ஆண்டுகளுக்கும் மேலாக மிரட்டியும், பொருளாதாரத் தடை கள் விதித்தும் அமெரிக்காவால் அடிபணிய வைக்க முடிய வில்லை.

பசி, பட்டினி, வேலை வாய்ப்பின்மை இல்லாத, யாரிடமும் கையேந்தாத சமூக அமைப்பை பிடல் காஸ்ட்ரோ அங்கு கட்டியெழுப்பியுள்ளார். கொரோனா காலத்தில் வல்லரசு நாடுகள் திணறிய போது, கியூபா தனது மருத்துவக் கட்டமைப்பால் உயிரிழப்பைக் கட்டுப்படுத்தியதோடு உலக நாடுகளுக்கும் மருத்துவர்களை அனுப்பி மனிதகுலத்திற்குச் சேவை செய்தது.

இதனால்தான் கியூபா மக்களைத் தண்டிக்கும் நோக்கில் அமெரிக்கா தற்போது கடுமையான எரிபொருள் பற்றாக் குறை மற்றும் மின்தடைகளை ஏற்படுத்தி வருகிறது. கியூபா மீது நேரடியாகப் போர் தொடுக்க வும் முயல்கிறது. இதை நாம் வேடிக்கை பார்க்க முடியாது.

சோசலிச சமூகத்தை அழிக்க முடியாது என்பதை மீண்டும் கியூபா நிரூபிக்கும்” என்று கே.பாலகிருஷ்ணன் முழங்கி னார்.

மேலும், “1947 முதல் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து வந்த இந்தியா, மோடி ஆட்சிக்கு வந்த பிறகு இஸ்ரே லின் கொடூரத் தாக்குதல்களை யும் காசா மக்களின் மனித உயிரிழப்புகளையும் கண்டிக்க மறுக்கிறது.

ஈரான் மீது நடத்தப் படும் தாக்குதல்களுக்கு அமெரிக்கா ஆயுதங்களை வழங்குகிறது; அதற்கு அடுத்த படியாக இந்தியாவும் ராணுவத் தளவாடங்களை வழங்கும் நாடாக மாறியுள்ளது. உள் நாட்டில் சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக் காவின் போர் வெறி மற்றும் கொள்ளை நோக்கத்தால் இந்திய மக்களும் பாதிக்கப்படுவதால், இடதுசாரி இயக்கங்கள் ஏகாதி பத்திய எதிர்ப்பு இயக்கத்தைக் கிராமங்கள் தோறும் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்” என கே.பாலகிருஷ்ணன் குறிப்பிட் டார். இப்பொதுக்கூட்டத்திற்குச் கட்சியின் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் தலைமை தாங்கினார். மாநகர் செயலாளர் ஆர்.அமர்நாத் வரவேற்றார். எழுத்தாளர் மாதவராஜ் ‘என்றும் தேவைப்படுகிறார் சேகுவேரா’ என்ற தலைப்பில் உரை யாற்றினார். முன்னதாக, பொதுக் கூட்ட மேடை அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சே குவேரா உருவப்படத்திற்கு கே.பால கிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் மலர்தூவி வீரவணக்கம் செலுத்தினர். கிருஷ்ணன் மற்றும் மகேஷ் அரசன் ஆகியோர் எழுச்சிமிக்க பாடல்களைப் பாடினர்.

இக்கூட்டத்தில் மாவட்டச் செயற் குழு உறுப்பினர்கள் வி.உதயகுமார், வி.சுப்பராயன், ஆர்.ராமச்சந்திரன், எஸ்.திருஅரசு, ஜி.ஆர்.ரவிச்சந்திரன், பி.தேன்மொழி, ஜே.ராஜேஷ்கண் ணன், எஸ்.பிரகாஷ், பி.வாஞ்சிநாதன் உள்ளிட்ட மாவட்டக் குழு உறுப்பினர் களும் பொதுமக்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.

சேலத்தில் மாபெரும் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி

கட்சியின் அறைகூவலின்படி, சேலம் கோட்டை மைதானத்தில் ஏகாதி பத்திய எதிர்ப்பு மற்றும் கியூபா ஒருமைப் பாடு பொதுக் கருத்தரங்கம், புகைப் படக் கண்காட்சி மற்றும் கலை நிகழ்ச்சிகள் பிரம்மாண்டமாக நடை பெற்றன. மாவட்டச் செயலாளர் ஏ.ராம மூர்த்தி இந்நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர் எம்.சேது மாதவன் வரவேற்புரை ஆற்றினார்.

கியூபப் புரட்சி வரலாற்றை விளக் கும் வரலாற்றுச் சிறப்புமிக்க இக்கண் காட்சியை ஜாமியா பள்ளிவாசல் முன்னாள் முத்தவல்லி எம்.நாசர்கான் என்கிற அமான் மற்றும் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஏ.கலியபெரு மாள் ஆகியோர் திறந்து வைத்தனர். சிஐடியு மாநிலக் குழு உறுப்பினர் ஆர்.வெங்கடபதி கலை நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார்.

இப்பொதுக் கருத்தரங்கில் சிபிஎம் மத்தியக் குழு உறுப்பினர் பி.சம்பத், மாநிலச் செயற்குழு உறுப்பினர் செ. முத்துக்கண்ணன் ஆகியோர் ஏகாதி பத்திய எதிர்ப்பு மற்றும் கியூபா ஒரு மைப்பாடு குறித்து கருத்துரையாற்றி னர்.

கருத்தரங்கில் சிபிஐ மாவட்டச் செய லாளர் ஏ.மோகன், சிபிஐ (எம்-எல்) மாவட்ட நிலைக்குழு உறுப்பினர் ஜி. ஜெயராமன், விசிக இஸ்லாமிய ஜன நாயகப் பேரவை மாநிலச் செயலாளர் ஐ.காஜாமைதீன், முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவர் சையது மூஸா, மமக மாவட்டத் தலைவர் ஷேக் முகமது, எம்ஜேகே மாவட்டச் செயலா ளர் சதாம் உசேன் உள்ளிட்ட பல தோழமை இயக்கத் தலைவர்கள் கலந்துகொண்டு ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தை வாழ்த்தி உரையாற்றினர். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.ராஜாதி நன்றி கூறினார்.

மேலும் கோயம்புத்தூர், மதுரை உள்ளிட்ட மையங்களிலும், எழுச்சிமிகு கருத்தரங்குகள் நடைபெற்றன. கோயம்புத்தூரில் மார்க்சிஸ்ட் கட்சி யின் மத்தியக்குழு உறுப்பினர் கே.பால பாரதி, மதுரையில் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று உரையாற்றி னர்.

மதுரையில் நூற்றுக்கும் மேற்பட்ட இளம் கம்யூனிஸ்ட்டுகள் சே குவேரா உருவம் பொறித்த டி-சர்ட்டுகளுடன் பங்கேற்றது பார்வையாளர்களைக் கவர்ந்தது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.