காஞ்சியில் சேகுவேராவின் 98-வது பிறந்தநாள் விழா
15 Jun 2026, 12:38 am
<p><strong>காஞ்சியில் சேகுவேராவின் 98-வது பிறந்தநாள் விழா</strong></p><p>உலகப் புரட்சியாளர் தோழர் சேகுவேராவின் 98-வது பிறந்தநாளை முன்னிட்டு, காஞ்சிபுரத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநகரக் குழு சார்பில் அவரது உருவப்படத்திற்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இந்த நிகழ்விற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் காஞ்சி மாநகரத் தலைவர் மு. சூர்யா பாரதி தலைமை தாங்கினார். இதில் சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் து. கோகுல் பாரதி, மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் S. உதயகுமார், மாநகரச் செயலாளர் ஐயப்பன், மாநகரக் குழு உறுப்பினர் கோவிந்தசாமி, இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் S. ஏங்கல்ஸ், மாவட்ட துணை தலைவர் S. செந்தமிழ் பாரதி மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் கே. நேரு, ஜீவா, இ. சங்கர் உள்ளிட்ட தோழர்கள் கலந்துகொண்டு புரட்சியாளர் சேகுவேராவின் தியாகங்களைப் போற்றி உரையாற்றினர்.</p>
