தீவிபத்தில் பாதிக்கப்பட்ட பழங்குடி குடும்பங்களுக்கு தொண்டு நிறுவனம் உதவி
20 Feb 2026, 2:39 pm
<p><strong>தீவிபத்தில் பாதிக்கப்பட்ட பழங்குடி குடும்பங்களுக்கு தொண்டு நிறுவனம் உதவி</strong></p>
<p> திருவள்ளூர், பிப்.20- திருமேனி குப்பத்தில் பழங்குடி இன மக்க ளின் குடிசைகள் தீ விபத்தில் பாதிக்கப் பட்ட குடும்பங்களுக்கு எய்டு இந்தியா தொண்டு நிறுவனம் நிவாரண பொருட்களை வழங்கியது. திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம் திருமேனிகுப்பத்தில், அண்மை யில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பழங்குடி இன மக்களின் குடிசைகள் எரிந்து சாம்பலாகின. இதில் பாத்திரங்கள், துணிமணிகள் என அனைத்தும் தீக்கிரையானதால், மாற்று உடை கூட இன்றி நடுத்தெருவில் நிற்கும் தங்களுக்கு மாவட்ட நிர்வாகம் இதுவரை எவ்வித உதவியும் செய்யவில்லை எனப் பாதிக்கப்பட்ட மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், எய்டு இந்தியா தொண்டு நிறுவனம் சார்பில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குச் சோலார் விளக்குகள், சமையல் பாத்திரங்கள், பெட்டி மற்றும் கால ணிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் நிவாரணமாக வழங்கப்பட்டன. இது குறித்துத் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர். தமிழ்அரசு கூறுகையில், மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும், தீயில் எரிந்து போன குடிமனைப் பட்டாக்கள், ஜாதிச் சான்றிதழ், ஆதார், குடும்ப அட்டை மற்றும் பள்ளிச் சான்றிதழ்களை மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.</p>
