முந்தய பக்கம்

தென்சேரிமலையில் தேர் வெள்ளோட்டம்

1 Feb 2026, 3:51 pm
தென்சேரிமலையில் தேர் வெள்ளோட்டம்
<p><strong>தென்சேரிமலையில் தேர் வெள்ளோட்டம்</strong></p> <p>கோவை, பிப்.1- சூலூர் அருகே உள்ள தென்சேரிமலையில் தங்கத்தேர் வெள்ளோட்டம் ஞாயிறன்று நடைபெற்றது. கோவை மாவட்டம், சுல்தான்பேட்டை ஒன்றியம். தென் சேரிமலை மந்திரகிரி வேலாயுத சுவாமி கோவிலில் பொது மக்கள் பங்களிப்புடன் சுமார் 15 கோடி ரூபாய் செலவில் புதிய &nbsp;தங்கத்தேர் பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளது. இந்த &nbsp;தங்கத்தேர் வெள்ளோட்ட நிகழ்ச்சி ஞாயிறன்று காலை நடை பெற்றது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகி யோர் தேர் வெள்ளோட்டத்தை துவக்கி வைத்தனர். தொடர்ந்து, செஞ்சேரிமலையில் சுமார் 3 கோடி ரூபாய் செல வில் அமையவுள்ள ஐந்து நிலை ராஜகோபுரத்திற்கான பணி களுக்கு அமைச்சர்கள் அடிக்கல் நாட்டினர். இதன்பின் செய்தி யாளர்களை சந்தித்த அமைச்சர் சாமிநாதன், மருதமலை முரு கன் கோவிலில் சிலை வைக்க உச்ச நீதிமன்றம் தடை விதித் துள்ள நிலையில், செஞ்சேரி மலையில் பிரம்மாண்ட முருகன் &nbsp;சிலை அமைத்தால் இப்பகுதி சுற்றுலாத்தலமாக தரம் உயருமா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, &nbsp;பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் இது தொடர்பாக கோரிக்கை &nbsp;வைத்தால் அதனை அரசு உரிய முறையில் பரிசீலித்து, அங்கு &nbsp;பிரம்மாண்ட முருகன் சிலை அமைக்க தேவையான நட வடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram