தீக்கதிர் முக்கிய செய்திகள்
5 Apr 2026, 3:36 pm

மேலூர் தொகுதிக்கு காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு

சென்னை: மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மதுரை மாவட்டம், மேலூர் சட்டமன்றத் தொகுதி யில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை அக்கட்சி யின் அகில இந்தியத் தலைமை அறிவித்துள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதி கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன. 27 தொகுதிகளுக்கு முன்பே வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், மேலூர் தொகுதி மட்டும் நிலுவையில் இருந்தது. இப்போது அந்தத் தொகுதியில் மூத்த காங்கிரஸ் நிர்வாகியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான விஸ்வநாதன் போட்டியிடுவார் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்து உள்ளார். இதனோடு கூட்டணியின் முழுமையான வேட்பாளர் பட்டியல் இறுதியானது.

ஏப்.10 முதல் வீடு தேடி வரும் ‘பூத் சிலிப்’

சென்னை: தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், வாக்காளர்களுக்குத் தேர்தல் தொடர்பான இன்றியமையாத தகவல்களை வழங்கும் பணியில் தேர்தல் ஆணையம் இறங்கியுள்ளது. ஏப்ரல் 23 ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஒரே கட்ட மாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், வாக்கா ளர்கள் தங்கள் வாக்குச்சாவடி விவரங்களை எளிதில் அறிந்துகொள்ள ஏதுவாக ‘வாக்காளர் தகவல் சீட்டு’ (பூத் சிலிப்) விநியோகிக்கும் பணி ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் தொடங்கப்படவுள்ளது. கடந்த தேர்தல்களில் வழங்கப்பட்டு வந்த புகைப் படத்துடன் கூடிய பூத் சீட்டுகளுக்குப் பதிலாக, இந்த முறை வாக்காளர் தகவல் சீட்டுகள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்தச் சீட்டுகளில் வாக்காளர் பட்டியலில் உள்ள வரிசை எண், வாக்குச்சாவடியின் பெயர், வாக்குப்பதிவு நடைபெறும் நாள் மற்றும் நேரம் உள்ளிட்ட முக்கியத் தகவல்கள் இடம்பெற்றிருக்கும். வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (பி.எல்.ஓ.) அந்தந்தப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கே நேரடியாகச் சென்று இந்தத் தகவல் சீட்டுகளை வழங்குவார்கள். ஏப்ரல் 17 ஆம் தேதிக்குள் அனைத்து வாக்காளர்களுக் கும் இந்தச் சீட்டுகள் சென்றடைவதை உறுதி செய்யு மாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதன் மூலம், கடைசி நேரத்தில் வாக்காளர்கள் தங்கள் வாக்குச் சாவடியைத் தேடி அலையும் சிரமம் தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்துடன் இணைந்து கேரளம், மேற்குவங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு ஏப்ரல் 9 ஆம் தேதியே வாக்குப்பதிவு நடைபெற்று முடியும். மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23 மற்றும் 29 என இரு கட்டங் களாகத் தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் பட்டியல்கள் முழுமையாக தயார் நிலையில் உள்ள தாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் முன்னேற்பாடுகள் மாவட்டம் தோறும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. வாக்காளர் தகவல் சீட்டுகளைப் பெற்றுக் கொண்டு, தங்களுக்கு ஒதுக்கப் பட்ட வாக்குச்சாவடிகளுக்குச் சென்று ஜனநாயகக் கட மையை ஆற்றுமாறு தேர்தல் ஆணையம் மக்களை அழைத்துள்ளது.

தமிழகத்தில் மின் நுகர்வு அதிகரிப்பு

சென்னை: தமிழகத்தில் வழக்கத்திற்கு மாறாக இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலேயே கோடை வெப்பம் கடுமையாகி, மின் நுகர்வு கணிசமாக உயர்ந்துள்ளது. ஏப்ரல் 3ஆம் தேதி மட்டும் மாநிலம் முழுவதும் 43.47 கோடி யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது நடப்பு ஆண்டில் இதுவரை பதிவான அதிகபட்ச அளவாகும். தமிழகத்தில் தினசரி சராசரி மின் நுகர்வு 30 கோடி யூனிட்களாக இருந்துவரும் நிலையில், கடந்த சில நாட்களாக அது 40 கோடி யூனிட்களாக உயர்ந்திருந்தது. வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் வீடுகளிலும் அலுவல கங்களிலும் மின்விசிறிகள் மற்றும் ஏசி சாதனங்களின் பயன்பாடு கூடியிருப்பதே இதற்குக் காரணம் என்று மின் துறை சுட்டிக்காட்டியுள்ளது. வழக்கமாக அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் கொளுத்தும் ஏப்ரல் இறுதி மற்றும் மே மாதங் களிலேயே மின்சாரப் பயன்பாடு உச்சத்தை எட்டும். ஆனால் இந்த ஆண்டு முன்கூட்டியே வெப்பம் அதிகரித் துள்ளதால், ஏப்ரல் இறுதி வாரங்களில் மின் நுகர்வு வர லாற்றிலேயே புதிய உச்சத்தைத் தொடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரையிலான உச்ச அளவாக 2024 ஏப். 30 அன்று பதிவான 45.43 கோடி யூனிட் கணக்கிடப் பட்டுள்ளது.

வேட்பாளர்கள் பற்றி அறிய புதிய இணையதளம்

சென்னை, ஏப்.5 - தேர்தலில் போட்டி யிடும் வேட்பாளர்களின் கல்வித் தகுதிகள் மற்றும் குற்றப் பின்ன ணிகளை வாக்கா ளர்கள் எளிதாக அறிந்து கொள்ள இந்தியத் தேர்தல் ஆணையம் புதிய இணைய தளத்தை உருவாக்கி யுள்ளது. தமிழ்நாடு சட்டப் பேரவை தேர்தல் அட்ட வணையை ஆணையம் கடந்த மார்ச் 15 ஆம் தேதி அறிவித்தது. தங்கள் தொகுதி வேட் பாளர்களைப் பற்றி முழுமையாக அறிந்து கொண்ட பின்னரே வாக்களிக்கும் உரி மையை பயன்படுத்து மாறு வாக்காளர்கள் அழைக்கப்படு கிறார்கள்.

தமிழகத்தில் ரூ.170 கோடி பறிமுதல்

சென்னை, ஏப்.5 - ஏப்.23 ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலுக் கான நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நாள் முதல் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் ரூ.170 கோடி மதிப்பிலான பணம், மதுபானங்கள் மற்றும் போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. தேர்தல் நடத்தை விதியின்படி, ரூ.50 ஆயி ரத்திற்கும் அதிகமான பணத்தை கொண்டு செல்வோர் உரிய ஆவ ணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இல்லையெ னில் தேர்தல் பறக்கும் படையினரால் பணம் பறிமுதல் செய்யப்ப டும். மாவட்டம் தோறும் நடைபெறும் தீவிர வாக னச் சோதனைகளில் விதிமுறை மீறல்கள் தொடர்ந்து கண்டு பிடிக்கப்பட்டு வரு கின்றன. தேர்தல் நடைபெ றும் ஐந்து மாநிலங் களிலும் இதுவரை மொத்தமாக ரூ.651 கோடி பறிமுதல் செய் யப்பட்டுள்ளது. மாநில வாரியாக பார்க்கை யில், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.319 கோடி பறி முதல் ஆகியுள்ளது. அசாமில் ரூ.97 கோடியும், தமிழகத்தில் ரூ.170 கோடியும், கேர ளத்தில் ரூ.58 கோடியும், புதுச்சேரியில் ரூ.7 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

நெல்லை, பொதிகை விரைவு ரயில் அட்டவணையில் மாற்றம்

சென்னை, ஏப்.5 - சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்த பராமரிப்பு மற்றும் புதுப்பிப்புப் பணிகள் வெற்றிகரமாக நிறை வடைந்துள்ளன. இதன் விளைவாக, மின்சார ரயில்கள் பழைய அட்டவணைப்படி இயக்கப்படத் தொடங்கியுள்ளன. எனினும், தொடரும் மற்ற பணிகளின் காரண மாக சில முக்கிய விரைவு ரயில்களின் இயக்கத்தில் தெற்கு ரயில்வே மாற்றங்கள் மேற்கொண்டுள்ளது. திருநெல்வேலி-சென்னை எழும்பூர் நெல்லை விரைவு ரயில் (12632) ஏப்ரல் 6 முதல் 21 வரை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும். ராமேஸ்வரம் - சென்னை எழும்பூர் விரைவு ரயில் (16752) ஏப்ரல் 6 முதல் மறு அறிவிப்பு வரும் வரை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும். சென்னை எழும்பூர்- செங்கோட்டை பொதிகை விரைவு ரயில் (12661) ஏப்ரல் 7 முதல் 22 வரை எழும்பூருக்குப் பதிலாக தாம்பரத்திலிருந்து புறப்படும். சென்னை- ராமேஸ்வரம் விரைவு ரயில் (16751) ஏப்ரல் 7 முதல் மறு அறிவிப்பு வரும் வரை தாம்பரத் திலிருந்து புறப்படும். ஹைதராபாத்-தாம்பரம் சார்மி னார் விரைவு ரயில் (12760) ஏப்ரல் 5 முதல் மறு அறிவிப்பு வரும் வரை சென்னை கடற்கரை நிலை யம் வரை மட்டுமே இயக்கப்படும். தாம்பரம்- ஹைத ராபாத் சார்மினார் விரைவு ரயில் (12759) ஏப்ரல் 6 முதல் சென்னை கடற்கரை நிலையத்திலிருந்து புறப்படும். இந்த ரயில்களில் வரும் பயணிகள் சென்னை நகரின் மையப் பகுதிகளை அடைய தாம்பரத்தில் இறங்கி மாற்று போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத் துமாறு தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.