மாற்றமா? ஏமாற்றமா? கேரள மண்ணில் மோடியின் ‘பழைய பல்லவி’
31 Mar 2026, 4:50 pm
<p><strong>மாற்றமா? ஏமாற்றமா? கேரள மண்ணில் மோடியின் ‘பழைய பல்லவி’ </strong></p>
<p>கேரள சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ‘மாறாதது எல்லாம் மாறும்’ எனப் பாலக்காட்டில் பிரதமர் நரேந்திர மோடி முழங்கியுள்ளார். கடந்த பத்தாண்டுகளில் ஒன்றிய அரசு ஏற்படுத்திய விலைவாசி உயர்வு மற்றும் வேலையில்லாத் திண்டாட்டத்தைக் கேரளத்திற்கும் கொண்டுவரப் போகிறாரோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. மத அரசியல் வித்தைகள் பாலக்காட்டின் கல்பாத்தி கோவிலைக் காசியுடன் ஒப்பிட்டு, ‘ஆன்மீகத் தூண்டில்’ போடப் பிரதமர் முயன்றுள்ளார். மதச்சார்பற்ற கலாச்சாரம் கொண்ட கேரள மண்ணில், மத அடையாளங்களை வைத்து ஓட்டு வேட்டையாட நினைக்கும் வடமாநில உத்திகள் எடுபடாது. அறிவுசார் சமூகமான கேரளம், இத்தகைய அரசியலை ஏற்காது என்பது அவருக்கு இன்னும் புரியவில்லை. ஏமாற்றப்பட்ட மக்கள் எல்.டி.எப் மற்றும் யு.டி.எப் கூட்டணிகளைப் ‘பி-டீம்’ எனக் கிண்டல் செய்த பிரதமர், பா.ஜ.க-வைத் தான் ‘ஏ-டீம்’ என்கிறார். பொதுத்துறை நிறுவனங்களைக் கார்ப்பரேட்களுக்குத் தாரை வார்ப்பதிலும், புலனாய்வு அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சிகளை மிரட்டுவதிலும் அவர்கள் சந்தேகமின்றி ‘ஏ-டீம்’ தான். நிதி ஆயோக் அறிக்கையிலேயே முதலிடம் வகிக்கும் கேரளத்தின் கல்வி மற்றும் சுகாதாரத்தைக் ‘கொள்ளை’ என விமர்சிப்பது வேடிக்கையானது. பெண் பாதுகாப்பு பெண்கள் பாதுகாப்பு குறித்துப் பேசிய பிரதமர், மணிப்பூர் வன்முறை மற்றும் மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்தின்போது மௌனம் காத்ததை மக்கள் மறக்கவில்லை. ‘நாரி சக்தி’ என்பது வெறும் கோஷமல்ல, அது பெண்களுக்கான அதிகாரம் என்பதை எல்.டி.எப் அரசு ஏற்கெனவே நிரூபித்துள்ளது. வெற்று வாக்குறுதிகளையும் வெறுப்பு அரசியலையும் கேரளம் ஒருபோதும் ஏற்காது. கடந்த முறை பா.ஜ.க-விற்கு வழங்கப்பட்ட ‘பூஜ்ஜியம்’ என்ற பரிசே இந்தத் தேர்தலிலும் தொடரும். ஏப்ரல் 9 தேர்தல் முடிவுகள், மோடியின் ‘மாற்றத்தை’ மிகப்பெரிய ‘ஏமாற்றமாக’ மாற்றுவது உறுதி.</p>
