தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சந்திரயான்-4, சந்திரயான்-5 திட்டங்களுக்கு ஒப்புதல்: இஸ்ரோ தலைவர் தகவல்

14 Dec 2025, 3:45 pm
சந்திரயான்-4, சந்திரயான்-5 திட்டங்களுக்கு ஒப்புதல்: இஸ்ரோ தலைவர் தகவல்
<p><strong>சந்திரயான்-4, சந்திரயான்-5 திட்டங்களுக்கு ஒப்புதல்: இஸ்ரோ தலைவர் தகவல்</strong></p> <p>சென்னை, டிச.14 - இந்தியா தனது விண்வெளி ஆராய்ச்சியில் மற்றொரு முக்கியமான கட்டத்துக்கு நகர்கிறது. சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து &nbsp;சந்திரயான்-4 திட்டத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தீவிரமாக களம் இறங்கியுள்ளது. &nbsp;நிலவுக்குச் சென்று அதன் மேற்பரப்பில் இருக்கும் மண் மற்றும் கற்களை எடுத்து வரு வதற்கான திட்டமே சந்திரயான்-4 ஆகும். இத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து ரூ.2 ஆயிரத்து 104 கோடி நிதி ஒதுக்கி யுள்ளது. சந்திரயான்-4 திட்டத்தில் நிலவுக்கு அனுப்பப் படும் கருவிகள் இரண்டு தொகுப்புகளாக எல்.வி.எம்-3 மற்றும் பி.எஸ்.எல்.வி. ஆகிய 2 ராக் கெட்டுகள் மூலம் தனித்தனியாக விண்ணில் செலுத்தப்படவுள்ளன. சந்திரயான்-5 திட்டம் &nbsp;ஜப்பான் நாட்டுடன் இணைந்து செயல்படுத்தப் பட உள்ளது. இந்நிலையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி &nbsp;நிறுவனம் செயல்படுத்த இருக்கும் சந்திரயான்-4 &nbsp;மற்றும் சந்திரயான்-5 ஆகிய 2 திட்டங் களுக்கும் ஒன்றிய அரசிடமிருந்து ஒப்புதல் பெறப் பட்டுள்ளது. 2028ஆம் ஆண்டிற்கான 2 முக்கிய நிலவு பயணங்களும் திட்டமிடப்பட்டுள்ளன. பேரிடர் மேலாண்மை, விவசாயம் மற்றும் &nbsp;தேசிய மேம்பாட்டுத் துறைகளில் செயற்கைக் கோள் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை இஸ்ரோ தொடர்ந்து விரிவுபடுத்துகிறது என்று இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தெரிவித்தார். சந்திரயான்-4 மற்றும் சந்திரயான்-5 ஆகிய 2 திட்டங்களுக்கும் ஒப்புதல் கிடைத்துள்ளது. இதனை 2028 ஆம் ஆண்டுக்குள் விண்ணில் ஏவ இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். விவசாயம், நீர் மேலாண்மை மற்றும் பேரிடர் தொடர்பான பயன்பாட்டு பகுதிகள் விண்வெளி நிறுவனத்திற்கு ஒரு முக்கிய மைய மாக உள்ளன. குறிப்பாக பேரிடர் எச்சரிக்கை மற்றும் தணிப்பு என்பது நாங்கள் பணியாற்றி வரும் மிக முக்கியமான பகுதிகளில் ஒன்றாகும் என்று அவர் குறிப்பிட்டார். இந்திய அரசின் வேளாண்துறை மற்றும் பல்வேறு விவசாய பல்கலைக்கழகங்களுடன் இஸ்ரோ இணைந்து விரிவாக ஒத்துழைத்து பணி யாற்றி வருகிறது. குறிப்பாக விண்வெளி சார்ந்த கருவிகள் மூலம் விவசாய விளைச்சல்களை மேம்படுத்துவதில் இஸ்ரோ தீவிரமாக செயல் பட்டு வருகிறது. விவசாயம் முக்கியமான துறை யாக இருப்பதால் மகசூல் முன்னறிவிப்பு எங்கள் &nbsp;முக்கியமான செயல்பாடுகளில் ஒன்றாகும். குறைந்தது 9 பயிர்களின் மகசூல் முன்ன றிவிப்பை செய்கிறோம். &nbsp;இஸ்ரோ தொடர்ந்து வெள்ளம், சேத முறை களை கண்காணித்து முன்கூட்டியே முன்னறி விப்பு எச்சரிக்கைகளை வெளியிடுகிறது என்றும் &nbsp;இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தெரிவித்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.