மோடிக்கு வெள்ளிவிழா எடுக்கும் சந்திரபாபு நாயுடு சுயநல வேடதாரியின் கரிசனம் - எஸ்.வி.வேணுகோபாலன்
11 Oct 2026, 9:55 pm

மோடிக்கு வெள்ளிவிழா எடுக்கும் சந்திரபாபு நாயுடு சுயநல வேடதாரியின் கரிசனம் - எஸ்.வி.வேணுகோபாலன்

சுவர்கள் எல்லாம் இற்றுப் போய், மேற்கூரை சரிந்து, எப்போது இடிந்து விழுமோ என்று இருக்கும் ஒரு கட்டிடத்திற்கு வெள்ளிவிழா நடத்திட சான்றிதழ் கொடுத்திருக்கிறார் ஓர் உத்தமர். எல்லா விதங்களிலும் தோற்றுப்போன, பல வகைகளிலும் அம்பலப்பட்டு நிற்கிற, நாட்டு மக்களுக்கு ஒரு நற்பயனும் விளைவிக்காத நாசகர செயல்களையே முப்போதும் நாடி நிற்கிற — குறிப்பாக அக்டோபர் 10 அன்று தலைநகரில் ஒரு ஜனநாயக போராட்டத்தை

சந்திக்கக் கூடத் துணிவு இன்றி எல்லாப் போக்கு வரத்தையும் மூடி, இணைய வழி தொடர்புகளை முடக்கி, இராணுவப் படைகளைத் தலைநகரில் குவித்து ஒடுங்கி உட்கார்ந்திருக்கும் — ஓர் அரசியல்

வாழ்க்கையின் 25ம் ஆண்டு நிறைவு பற்றி சொந்தக்கட்சிக்காரர்கள் கூடப் பெரிதாக வாய் திறக்கவில்லை. ஆட்சிக்கு முட்டுக்கொடுத்து நிற்கிற மேதாவி எதற்காககூரைமீது ஏறி நின்று இப்படி கூவோ கூவு என்று கூவி இருக்கிறாரோ தெரியவில்லை.

முன்னாள் ஊழல் குற்றச்சாட்டுகள், திடீர் விடுதலை

அக்டோபர் 7 அன்று தி இந்து ஆங்கில நாளேட்டில், ஆந்திர பிரதேச மாநில முதல் அமைச்சரும், தேசத்திலேயேமிகப் பெரிய சொத்துக்கார முதலமைச்சர் என்று பெயரெடுத்தவரும், அரசியல் களத்தில் மாமனார் என்.டி.ராமாராவையே கட்டம் கட்டிக் கவிழ்த்து ஆட்சியைக் கைப்பற்றிய சாகச வீரருமான என்.சந்திரபாபு நாயுடு, நரேந்திர மோடியை இந்தியாவின் வரலாற்றையே புரட்டிப் போட்ட 25 ஆண்டு கால அரசியல் தலைமைப் பண்பாளர் என்று கட்டுரை வடித்துள்ளார்.2023இல் திறன் வளர்ப்பு பயிற்சி தொடர்பான ரூ.370 கோடி ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்ட நாயுடு மீதான வழக்குகள், அமலாக்கத் துறை குற்றச்சாட்டுகள் எல்லாம் 2024இல் “சுமுகமாகத்” தீர்த்து வைக்கப்பட்டு அவர் விடுவிக்கப்பட்டது நாடறியும். நாடாளுமன்றத் தேர்தலில் தனிப் பெரும்பான்மை பெற முடியாமல் திண்டாடிய பாஜக, ஆட்சியைத் தக்க வைக்க நடத்திய பேரத்தில் நிதிஷ் குமாருடன் நாயுடுவும் கைகொடுத்துமோடி மூன்றாம் முறையாகப் பிரதமராகப் பட்டம் சூட்டிக் கொள்ள உதவினார் — எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம், செய்ந்நன்றி கொன்று விடக்கூடாதே என்று பரஸ்பரம் நடத்தும் கூட்டுக் களவாணித்தனத்தின் அண்மைய காட்சி தான் இந்த மோடிதுதிபாடல்.

நரேந்திர மோடி, ரயில் நிலையமே வந்திராத இடத்தில் கற்பனையான பிளாட்பாரத்தில் வரவே வராத

பயணிகளுக்கு டீ விற்றவர்; இல்லவே இல்லாத படிப்பை நடத்தாத கல்வி நிறுவனத்தில் இருந்து bஅக்காலத்தில்உருவாக்கப்படாதிருந்த கணினி எழுத்துருவில் தேர்ச்சி சான்றிதழ் பெற்றவர். இப்படியான அசாத்திய நாயகருக்குசரிக்கு சரி ஈடு கொடுக்கவல்ல சாதனையாளர் தானே வாழ்த்துப் பா வாசிக்க முடியும்!

நாயுடுவின் சொந்தக் களவாணித்தனம்

தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை காசுக்கு வாங்குவது, மிரட்டி மடியில் போட்டுக் கொள்வது, எப்படியாவது ஆட்சியைப் பிடிப்பது என்கிற அரசியல் சதுரங்க வேட்டையில் மோடிக்கு முன்னோடி சந்திரபாபு நாயுடுவே. அந்தப் பெருமைகளை ஒப்பிட்டு எழுதாதது வருத்தமே. மேற்கு வங்கத்தில் திரிணாமுல்காங்கிரஸ் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட ருக்மணி மல்லிக், பதவியை உதறி பாஜகவில் சரணடைந்து, முன்னர்பதவிக்காலம் முடித்த 3 திரிணாமுல் எம்பிக்கள் வரிசையில் நாலாவது நபராக பாஜக சார்பில் மாநிலங்களவைதேர்தலில் நிற்கும் ஜனநாயகசிறப்பையும் நாயுடு சுட்டிக் காட்ட வேண்டாமா? தான் காங்கிரஸில் இருந்து போட்டியிட்டு தோற்றது, உடனே தெலுங்கு தேசத்திற்குத் தாவியது, மாமனாரின் அன்பைப் பெற்றுக்கொண்டே கட்சியைத் தனக்குள் அள்ளிச்செருகி அவரையே வெளியேற்றியது — இவையெல்லாம் இன்று பாஜக அஸ்ஸாம், மணிப்பூர், மகாராஷ்டிரம் தொடங்கி மேற்கு வங்கம் வரை நடத்திக்காட்டி வருவதைப் புளகாங்கிதத்தோடு பார்த்தபடியே தான் பாராட்டுக் கட்டுரையை எழுதி இருக்க வேண்டும்.

வேளாண் சட்டங்கள், சைபராபாத் கனவுகள்

மூன்று வேளாண் சட்டங்கள் கொண்டு வந்து தேசத்தின் ஒட்டுமொத்த விவசாயிகளின் பாடுகளை ஒழித்துக் கட்டி கார்ப்பரேட் நிறுவனங்களின் பலிபீடத்தில் இந்திய உணவுத் தேவையைக் கொண்டு கிடத்திடப் பார்த்தவர் மோடி. அத்தனை திமிரோடு கொண்டுவந்த அந்தச் சட்டங்களை, தலைநகரில் ஓராண்டுக்கு மேலாக எல்லாப் பருவத்தையும் எதிர்கொண்டு போராட்டம்நடத்திய விவசாய சங்கங்களின் ஐக்கிய அமைப்பு மண்டையில் அடித்துப் பின்வாங்க வைத்தது. ஆந்திராவில் தான் முதல் அமைச்சராகப்பொறுப்பேற்ற காலத்தில் வேளாண் துறையை ஒழித்து ஐடி துறைக்கே முன்னுரிமை எனக் கோடிக்கணக்கில் பணம் வாரி இறைத்து, மக்கள் கொந்தளிப்புக்குப் பதில் சொல்ல இயலாமல் விரட்டப்பட்டவர் தான் சந்திரபாபு நாயுடு. பில் கிளிண்டன், பில் கேட்ஸ் போன்றோரை ஹைதராபாத்துக்கு வரவழைத்துத் தனது சைபராபாத் கனவுகளைப் பீற்றிக்கொண்டவர் அவர்; மோடியின் அமெரிக்க விசுவாசத்தை அவர் மெச்சுவதில் வியப்பில்லை. உலக மக்களை அச்சத்தின் விளிம்பில் நிறுத்தியிருக்கும் அமெரிக்கஏகாதிபத்திய அடிவருடியாகத் திகழும் மோடியை நாயுடு உச்சி குளிர்ந்து பாடுகிறார்.

முரண்பட்ட வரலாறு, மறைக்கப்பட்ட உண்மைகள்

2001இல் குஜராத் முதல்வராகத் தொடங்கிய மோடியின் தலைமைப் பண்பு 2014 முதல் பிரதமராக

ஜொலிக்கிறது என்று பொய்ச் சித்திரம் தீட்டும் நாயுடு, ஆந்திராவுக்கு சிறப்புத் தகுதி மறுத்ததற்காக எட்டாண்டுகளுக்கு முன் அமைச்சரவையில் இருந்து தன் பிரதிநிதிகளைத் திரும்பப் பெற்று கூட்ட

ணியிலிருந்தே ஏன் வெளியேறினார்? காங்கிரசுக்கு எதிராகத் தொடங்கி பின் அதே காங்கிரசோடு சேர்ந்து

பாஜகவுக்கு எதிராக ஏன் களம் இறங்கினார்? மக்கள் விரோத ஆட்சி என வாக்குறுதி மீறலைக் குற்றம்

சாட்டி அறிக்கைகள் வெளியிட்டவர், தென்னகத்தை வளர விடாதவர்கள் என 2018இல் ஒன்றிய ஆட்சியைக் கடுமையாக விமர்சித்தவர், இப்போது “தில்லியில் இருந்து அதிகாரம் செலுத்த விரும்பாதவர், கூட்டாட்சி

தத்துவத்தைக் கொண்டாடுபவர்” என மோடியை எப்படி எழுதுகிறார்?

2016 நவம்பர் 8-இல் போலிக் காரணங்களை முன்வைத்து ரூ.500, ரூ.1000 தாள்களைச் செல்லாது என அறிவித்து, டிஜிட்டல் மயமாகிவிட்டது இந்தியா என பம்மாத்துப் பேசி, பத்தாண்டுகள் கழித்து டிஜிட்டல்பரிவர்த்தனைக்கும் வரி விதித்து மக்களை முட்டாளாக்கிய மோடியை சூத்திரதாரி, ராஜதந்திரி என்கிறார்நாயுடு. மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதிச் சட்டத்தை ஒழித்துக் கட்டி கிராமப்புற ஏழை மக்களின் வாழ்வாதாரத்தைக் குழிதோண்டிப் புதைத்த மோடியை, எளிய மக்களுக்கான நலச்சட்ட வடிவ மைப்பாளர்என்றும், உணவுக் கிடங்குகளில் தானி யத்தைப் பெருச்சாளிகளுக்கும் அதானி வகையறா வுக்கும் இறைத்துவிட்டுபட்டினியைக் கோடிக்கணக்கான ஏழைகள் தலையில் சுமத்திய ஆட்சியை ரேஷன் கடைகளில் அள்ளி வழங்கும் தர்மதுரைத்தனம் என்றும் வருணிக்கிறார். வங்கிகளில் கடன் வாங்கி ஏப்பம் விட்ட பெருநிறுவனங்களின் பல லட்சம் கோடி ரூபாய் கடன்களைத் தள்ளுபடி செய்து, ஒவ்வொரு நிதி நிலை அறிக்கையிலும் கார்ப்பரேட் கும்பலுக்குச் சலுகை வீசும் மோடி உண்மையில் யாருக்கானதர்மபிரபு என்பதைச் சொல்லியிருக்க வேண்டாமா?

கல்வி, விண்வெளி, பொதுத்துறை தனியார்மயம்

போட்டித் தேர்வு வினாத்தாள் கசிவுகளும் மோசடிகளும் அம்பலமாகி, இந்த ஜூலை மாணவர் இளைஞர் எழுச்சிக்குப் பணிந்து கல்வி அமைச்சரை விலகவைத்தவர் தான் மோடி — மக்கள் நம்பிக்கை பெற்ற தலைவரின் லட்சணம் இது! விண்வெளியையும்தனியாருக்குத் தாரை வார்த்ததைப் பெருமையாகப் பேசும் நாயுடு, எண்ணெய் அரசியலை அம்பானி கும்பலுக்குச் சாதகமாக்கியும், நாம் விரும்பும் நாட்டில் இருந்து எண்ணெய் வாங்கக் கூடாதென இரட்டிப்பு வரி விதிக்கும்டொனால்டு டிரம்புக்கு எதிராகச் சுண்டுவிரல் கூட உயர்த்தாத அடிமைத்தனத்தோடும் நடக்கும் மோடியை நவீனஇந்தியாவைச் செதுக்கும்சிற்பி என்கிறார். நவ இந்தியாவின் கோயில்கள் என வருணிக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களை யெல்லாம் தனியாருக்குத் தாரை வார்த்துக் கொண்டிருப்பவரை நவீன இந்தியாவின் வரைபடம் தீட்டியவர் என்கிறார் நாயுடு. சமூக அமைதி, மத நல்லிணக்கம், தேச ஒருமைப்பாடு, சாதிய ஒடுக்குமுறை பற்றி ஒருவார்த்தை கூடத் தொடாமல், 2047 வரை இதே திசையில் இன்னும் தீவிரமாக நாடு நடக்க வேண்டும்என வாழ்த்தி(?) அருளி இருக்கிறார்.

மறக்கப்பட்ட கொடூரங்கள்

2001 குஜராத் பூஜ் நிலநடுக்க நிவாரணத்தில் சிறுபான்மை இஸ்லாமியருக்கு எதுவும் செல்லக் கூடாதெனவன்மத்தை உருவாக்கிய பெருமை மோடிக்குச் சேரும். 2002-இல் வதந்தியைத் தீயாகப் பரவச் செய்துஆயிரக்கணக்கில் இஸ்லாமியரை வெட்டிச் சாய்த்தது, கர்ப்பிணியின் வயிற்றைக் கீறிச் சிசுவையும் எரித்தது,தண்டிக்கப்பட்ட கயவர்களைக் காலத்திற்கு முன் விடுவித்து மாலை மரியாதையோடு வரவேற்க வைத்தது — இந்தப் பெருமைகளை நாயுடு பேசவில்லை. பாஜக ஆளும் மாநிலங்களில்புல்டோசர் அராஜகம், அயோத்தி கோயில் உண்டியல்கொள்ளை ஆகியவற்றுக்கும் இடமில்லாமல் போயிற்று. தேர்தல் பத்திரத்தில் பல்லாயிரம் கோடிகொள்ளையடித்தது, தேர்தலையே பத்திரமற்றதாக்க ஞானேஷ் குமார் போன்றோரைத் தலைமைத் தேர்தல்ஆணையராக நியமித்து கோடிக்கணக்கான வாக்காளர்களின் உரிமையைப் பறித்தது — இவையும் மோடியின் வெள்ளிவிழா சாதனையின் மைல் கற்களே; அவற்றுக்கு எதிரான நாடுதழுவிய கொந்தளிப்பைத் தலைநகர் பிரதிபலித்துக் கொண்டி ருக்கிறது. இவற்றையும் நாயுடு பதியத் தவறியிருக் கிறார்.

சுயநலத்தின் சூட்சுமம்

கட்டுரையின் முதல் மூன்று சொற்களிலேயே ஒரு சூட்சுமம் உள்ளது. தனக்கு 48 ஆண்டு பொது வாழ்க்கை நிறைவு பெற்றுள்ளது என்றே தொடங்குகிறார் நாயுடு. அதன் பொருள் — 2028இல் தன் பொன்விழாவை மோடி நாடு முழுவதும் கொண்டாட வேண்டும், தன்புகழை மக்களுக்குப் புத்தகம் போட்டுத் தரவேண்டும். ஏனெனில் 2029 நாடாளுதேர்தலில் தங்கள் ஆதரவு மோடிக்கும் ஆர்எஸ்எஸ்-பாஜக கோஷ்டிக்கும் தேவைப்படும் என்பதைச்சூசகமாக முதலடியிலேயே கொளுத்திப் போட்டுவிட்டுத் தான் தன் சரவெடியை விரித்துவைத்து வாணவேடிக்கை காட்டிச் சிலிர்த்துப் போயிருக்கிறார் சுயநல அரசியல்வாதி நாயுடு.

பொய் சாட்சியம் சொல்பவர் வீட்டில் ‘வேதாளம் சேருமே வெள்ளெருக்கம் பூக்குமே’ என்றாள் தமிழ்

மூதாட்டி அவ்வை. மக்களைக் கொள்ளை அடித்த வெள்ளிவிழாவையும், மண்ணைத் தின்ற பொன்விழாவையும் மக்கள் ஒருபோதும் கொண்டாட மாட்டார்கள். ஓடஓட விரட்டுவார்கள்!