சாம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டி கொண்டாட்டத்தில் வன்முறை பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் 900 பேர் கைது
1 Jun 2026, 11:07 pm
<p><strong>சாம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டி கொண்டாட்டத்தில் வன்முறை பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் 900 பேர் கைது</strong></p><p>70 ஆண்டு பழமை யான கால்பந்து தொடர்களில் ஒன்றான ஐரோ ப்பா கண்ட சாம்பியன்ஸ் லீக் தொடரின் (கிளப்) 2026ஆம் ஆண்டுக்கான இறுதி ஆட்டம் மே 30 அன்று புஸ்காஸ் அரேனா (ஹங்கேரி நாட்டில்) நடை பெற்றது. இந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் (பிஎஸ்ஜி - பிரான்ஸ் கிளப்) - அர்சனேல் (இங்கிலாந்து கிளப்) அணிகள் மோதின. தொடக்கம் முதலே மிக பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 4-3 (1-1) என்ற கோல் கணக்கில் (பெனால்டி சூட் அவுட்) பிஎஸ்ஜி அபார வெற்றி பெற்று, தொடர்ந்து 2ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. இந்த வெற்றிக் கொண்டாட்டத்திற்காக பிரான்ஸ் முழுவதும் பிஎஸ்ஜி ரசிகர்கள் வீதி களில் திரண்டனர். தலை நகர் பாரீஸில் புகழ்பெற்ற ‘சாம்ப்ஸ்-எலிசிஸ்’ வீதியில் ரசிகர்களுக்கும், காவல் துறைக்கும் இடையே திடீரென மோதல் வெடித்தது. இருசக்கர வாகனங்கள் எரிக்கப் பட்டன. கடைகளின் கண்ணா டிகள் அடித்து நொறுக்கப் பட்டன. குறி ப்பாக கொண்டாட்டத்தின் போது பாரீஸ் சுற்றுவட்டச் சாலை யில் தனது மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற ஒருவர் கொல்லப்பட்டுள் ளார். பல இடங்களில் கத்திக்குத்து, பிற தாக்குதல்கள் சம்பவ ங்களும் நிகழ்ந்தன. இந்த வன்முறை சம்பவங்களால் பாரீஸில் பேருந்து, ரயில் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இந்நிலையில், இந்த வன்முறை தொடர்பாக பாரீஸில் சுமார் 900 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரான்ஸ் அரசு திங்க ளன்று தெரி வித்தது. இது தொடர்பாக அந்நாட்டு உள்துறை அமைச்சர் லாரன்ட் நுனேஸ் கூறுகை யில், “நாங்கள் 890-க்கும் மேற்பட்டோரைக் கைது செய்துள்ளோம். ஒட்டு மொத்தமாக, இது கடந்த ஆண்டை விட 45% (கடந்த ஆண்டும் வன்முறை) அதி கம். இந்த வன்முறையில் சுமார் 180 பாதுகாப்புப் படை அதிகாரிகள் காயமடைந்துள்ளனர்” என அவர் தெரிவித்தார்.</p>
