தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தமிழ்நாடு தொழில் வளர்ச்சி சந்திக்கும் சவால்கள் - அ.அன்வர் உசேன்

19 May 2026, 9:24 pm
தமிழ்நாடு தொழில் வளர்ச்சி சந்திக்கும் சவால்கள் - அ.அன்வர் உசேன்

தமிழ்நாடு தொழில் வளர்ச்சி சந்திக்கும் சவால்கள் - அ.அன்வர் உசேன்

தமிழ்நாட்டில் புதிய அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் மிக முக்கியத்துவம் வாய்ந்த தொழில்துறை கீர்த்தனா அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 29 வயதான இவர், தற்போதைய அமைச்சர்களிலேயே மிகவும் இளையவர் என்ற பெருமையைப் பெறுகிறார். அதேசமயத்தில், தொழில்துறை என்பது லேசான சவால் அல்ல. ஒரு மாநிலத்தைத் தொழில் துறையில் முன்னேற்றம் காண வைப்பதும், புதிய தொழில் முதலீடுகளைக் கொண்டு வருவதும், ஏற்கெனவே செயல்படும் தொழில்களைக் காப்பதும், அதில் செல்வத்தைப் படைக்கும் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதும் மிகச் சவாலான கடமையாகும்.

ஒருபுறம் புதிய அமைச்சர் முன்அனுபவம் இல்லாத வராக இருக்கிறார்; மறுபுறம் அவரை வழிநடத்தும் அனுபவசாலிகளும் குறைவாகவே உள்ளனர். இந்தப்பின்னணியில், தமிழ்நாட்டின் தொழில்துறை வளர்ச்சி என்பது அநேகமாக முற்றிலும் அதிகாரி களை நம்பியே சுழலும் நிலை உருவாகியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு ஒசூரில் வரவிருந்த, ரூ. 15,803 கோடி முதலீட்டில் செயல்படுத்தப்படவிருந்த அதி முக்கியத்துவம் வாய்ந்த நடுத்தரப் போர் விமானத் தயா ரிப்புத் திட்டம் அண்டை மாநிலமான ஆந்திராவுக்குச் சென்றுள்ளதாகப் புகார்கள் கிளம்பியுள்ளன. இது போன்ற நிகழ்வுகள் இனி தொடரக் கூடாது என்ப தில் அரசு கவனமாக இருக்க வேண்டும்.

தொழில் வளர்ச்சியில் கம்யூனிஸ்டுகளின் பங்கு

தொழில் வளர்ச்சியைப் பொறுத்தவரை மகா ராஷ்டிரா மற்றும் குஜராத்துக்கு அடுத்தபடியாகத் தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது. அதேசமயத்தில் கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்கள் கடும் போட்டியில் களத்தில் உள்ளன. தமிழ்நாட்டின் இந்த பிரமிக்கத்தக்க வளர்ச்சி திடீரென வந்துவிடவில்லை. அதற்கான அடித்தளம் 1950-களிலேயே போடப்பட்டது. கம்யூனிஸ்ட் இயக்கமும் அதன் தலைவர்களும் அதில் முக்கிய பங்காற்றினர். பின்னர் ஆட்சிப் பொறுப்பில் இருந்த பல்வேறு அரசாங்கங்களின் பங்கும் முயற்சியும் மிக முக்கியமானது. தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிக ளும் வெவ்வேறு காலகட்டங்களில் எடுத்த தொடர் முயற்சிதான் தமிழ்நாட்டைத் தொழில்துறையில் ஒரு முன்னேறிய மாநிலமாகப் பரிணமிக்க வழிவகை செய்தது. இந்த அடிப்படை உண்மையைப் புரிந்து கொள்வது இன்றைய அரசாங்கத்திற்கும் புதிய தொழில்துறை அமைச்சருக்கும் மிக அவசியமாகும்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இரண்டாவது ஐந்தா ண்டுத் திட்டத்தின் நகல் 1957-ஆம் ஆண்டு விவாதிக்கப் பட்ட பொழுது, கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் கீழ்க்கண்ட தொழில்கள் தமிழ்நாட்டுக்குத் தேவை என வலியுறுத்தினர்:

K நெய்வேலி லிக்னைட் நிறுவனம்

K சேலம் இரும்பாலை

K சேது சமுத்திரம் திட்டம்

K தூத்துக்குடி துறைமுகம்

K கனிமவளங்கள் சார்ந்த தொழில்கள்

கம்யூனிஸ்டுகளின் கோரிக்கைகளில் இருந்த நியா யத்தை உணர்ந்த தமிழ்நாட்டின் அன்றைய நிதி அமைச்சர் சி. சுப்பிரமணியம், இந்தத் திட்டங்களை ஐந்தாண்டுத் திட்டத்தில் இணைக்கச் சம்மதித்தார். சேது சமுத்திரத் திட்டம் தவிர மற்ற அனைத்துத் திட் டங்களும் அமலாக்கப்பட்டுள்ளன. சங் பரிவாரத்தின் முட்டுக்கட்டை காரணமாகவே சேது சமுத்திரத் திட்டம் முடங்கியது என்பது வரலாற்று உண்மை.

பொதுத்துறைகள் எப்படி உருவாயின?

தமிழ்நாட்டின் மூன்று பெரும் பொதுத்துறை நிறுவனங்களான நெய்வேலி லிக்னைட் நிறுவனம் (NLC), பாரத மிகு மின் நிறுவனம் (BHEL- பெல்), சேலம் இரும்பாலை ஆகியவை தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கை ஆற்றுகின்றன. இந்த மூன்று மகத்தான நிறுவனங்களும் தமிழ்நாட்டில் தொடங்கப்படுவதற்கு கம்யூனிஸ்டுகள் முக்கிய காரணமாக இருந்தனர். நெய்வேலி லிக்னைட் நிறு வனம் சாத்தியமாவதற்கு மிக முக்கிய காரணகர்த்தா கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான தலைவர் தோழர் பி.ராமமூர்த்தி ஆவார். அதேபோல, பாரத மிகு மின் நிறுவனத்தின் ஒரு ஆலையை ஆந்திராவு க்குக் கொண்டு செல்ல முயன்ற பொழுது, பி.ராம மூர்த்தி, ஆர்.உமாநாத், கே.அனந்த நம்பியார் ஆகியோ ரும் அன்றைய தமிழ்நாட்டின் முதல்வர் காமராஜரும் உறுதியாக நின்ற காரணத்தால்தான் அந்த ஆலை திருச்சியில் அமைந்தது. இன்று மேலும் இரு ஆலைகள் ராணிப்பேட்டையிலும் திருமயத்திலும் செயல்படுகின்றன.

தொழில்களைப் பாதுகாக்க இயக்கங்கள்

தொழில்களைக் கொண்டு வருவதோடு பிரச்சனை தீர்வதில்லை; அந்தத் தொழில்களைப் பாதுகாப்பதி லும் கவனத்துடன் செயல்பட வேண்டியுள்ளது. ஜனதா ஆட்சியில் ‘பெல்’ நிறுவனத்தை ஜெர்மனி பன்னாட்டு நிறுவனமான சீமென்ஸுக்குத் தாரை வார்க்க நடந்த சதியை, தோழர் பி.ராமமூர்த்தி நூல் வெளியிட்டுத் தொ ழிலாளர்களைத் திரட்டி முறியடித்தார். 1990 மற்றும் 2000 ஆண்டுகளில் ‘பெல்’ ஆர்டர்கள் இல்லாமல் திணறிய பொழுது, கம்யூனிஸ்ட் இயக்கம் “பெல் நிறுவனத்தைக் காப்போம்! தேசம் காப்போம்” முழக்கத்துடன் போராடியது. அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி ஒன்றிய அர சிடம் வலியுறுத்தி ‘பெல்’ நிறுவனம் காப்பாற்றப்பட்டது.

கோவை வார்ப்படத் தொழிலுக்கு இரும்பு கிடைக்க நெருக்கடி ஏற்பட்ட பொழுது, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அன்றைய நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் கே.ரமணி ஒன்றிய அரசிடம் பேசித் தீர்வு கண்டார். கோவையில் மூடப்பட்ட தனியார் பஞ்சாலை களை, கம்யூனிஸ்ட் இயக்கப் போராட்டங்களின் விளை வாகவே 22 ஆலைகள் என்டிசி (NTC) ஆலைகளாகத் தேசியமயமாக்கப்பட்டன. சமீபத்தில் இன்ஜினியரிங் தொழில்களுக்கு நெருக்கடி ஏற்பட்ட பொழுதும், திருப்பூர் ஆயத்த ஆடைத் தொழில் நெருக்கடியிலும் கம்யூனிஸ்ட் இயக்கம் தொடர்ந்து தலையிட்டு வருகிறது. குன்னூர் பாஸ்டர் தடுப்பூசி மையம் மூடப் பட்ட பொழுது, கம்யூனிஸ்ட் தலைவர்கள் பிருந்தா காரத், டி.கே.ரங்கராஜனின் தொடர் போராட்டங்க ளால் அது மீண்டும் உற்பத்தியைத் தொடங்கியது.

தொழிலும் முக்கியம் - தொழிலாளர் நலனும் முக்கியம்

சென்னை வாகன உற்பத்தி மையமாக உருவெ டுத்ததிலும், மேற்கு மண்டலத் தொழில் வளர்ச்சியி லும் அவ்வப்பொழுது ஆட்சியில் இருந்த கட்சிகள் கடும் முயற்சிகள் எடுத்துள்ளன என்பதை மறுக்க முடியாது. புதிய தொழில்களான மென்பொருள், மருந்து தயா ரிப்பு, செமி கண்டக்டர், செயற்கை நுண்ணறிவு ஆகிய வற்றில் தமிழ்நாடு பெருமளவு கவனம் செலுத்த வேண்டி யுள்ளது. அதேபோல, தென் மாவட்டங்களில் தொழில் கள் உருவாகக் கடும் முயற்சிகள் தேவைப்படுகின்றன.

நவீன தாராளமயக் கொள்கைகள் மாநிலங்களி டையே “அதிதீவிரமான போட்டியை” விளைவித்துள் ளன. தொழில்களைச் சாதிக்கும் முனைப்பில் மாநில அரசாங்கங்கள் தொழிலாளர்களின் உரிமையைக் காற்றில் பறக்கவிடும் தவறான அணுகுமுறை தொழில மைதிக்கு பலன் தராது.

இத்தகைய பின்னணியில்தான் புதிய அரசாங்கம் பொறுப்பேற்றதும், அதில் இளம் வயதுடைய ஒருவ ரைத் தொழில்துறைக்கு அமைச்சராக்கியதும் நடந் துள்ளது. தமிழ்நாட்டில் இந்தத் துறையை வழி நடத்திய பக்தவச்சலம், ஆர்.வெங்கட்ராமன், இரா.நெடுஞ்செழி யன், ச. மாதவன் போன்ற தலைவர்களையும், அவர்க ளுக்கு வழிகாட்டிய காமராஜர், அண்ணா, கலைஞர் கருணாநிதி போன்ற ஆளுமைகளையும் கவனத்தில் கொண்டு புதிய அமைச்சரும் அரசாங்கமும் செயல்பட வேண்டும். இல்லையெனில், போர் விமானத் தயா ரிப்புத் திட்டம் ஆந்திராவுக்குச் சென்றது போல, பல திட்டங்களைத் தமிழ்நாடு இழக்கும் சூழல் உரு வாகும் அபாயம் ஏற்பட்டு விடும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.