திருச்சி விரைவு செய்திகள்
29 Dec 2025, 3:24 pm

நெல்லையில் இன்றுஎரிவாயு நுகர்வோர் குறைதீர்வு கூட்டம்

திருநெல்வேலி ,டிச. 29 திருநெல்வேலி மாவட்ட எரிவாயு நுகர்வோர் குறைதீர்வு கூட்டம் செவ்வாயன்று (டிச.30) நடைபெற வுள்ளது என்று மாவட்ட வருவாய் அலுவலர் மு.துரை தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு நுகர்வோர்களுக்கு எரிவாயு உருளை பதிவு செய்வதில் ஏற்படும் குறைபாடுகள் / தடங்கல்கள் மற்றும் எரிவாயு உருளைகள் வழங்குவதில் காலதாமதம் குறித்து நுகர்வோர்கள் தங்கள் குறைகளைப் பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள், மாவட்ட எரிவாயு ஒருங்கிணைப்பாளர் மற்றும் எரிவாயு நுகர்வோர் கள் கலந்து கொள்ளும் எரிவாயு நுகர்வோர் குறைதீர்வு கூட்டம் 30.12.2025 அன்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது. மேற்படி கூட்டத்தில் கலந்து கொண்டு எரிவாயு நுகர்வோர்கள் தங்கள் குறைகளை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

நாங்குநேரி சுங்கச்சாவடியில் சுங்கக்கட்டணம் செலுத்தாததால் அரசு பேருந்து சிறை பிடிப்பு

திருநெல்வேலி, டிச.29- குமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து நெல்லை க்கு தினமும் நான்குவழிச்சாலை வழியாக ஏராளமான அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நாகர்கோவி லில் இருந்து நெல்லை நோக்கி அரசு பேருந்து புறப்பட்டு வந்து கொண்டிருந்தது.நள்ளிரவு நேரத்தில் நாங்குநேரி சுங்கச்சாவடியை வந்தடைந்தபோது, அதில் சுங்கக்கட்ட ணம் செலுத்துவதற்கான போதுமான பணம் பேருந்தில் ஒட்டப் பட்டிருந்த பாஸ்ட்டேக் அட்டையில் இல்லை என்று கூறப்படுகிறது.இதனால் சுங்கச்சாவடி ஊழியர்கள் ‘பேருந்தை மேற்கொண்டு செல்ல அனுமதிக்காமல் தடுத்து சிறைபிடித்தனர். உடனடியாக நடத்துநர், போக்குவரத்து கழக மேலாளர் மற்றும் உயர் அதிகாரி களை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், எந்தவொரு அதிகாரியும்அழைப்பை ஏற்க வில்லை. மேலும் பயணிகளில் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் பெண்கள் என பலதரப் பட்டவர்களும் இருந்தனர். நள்ளிரவில் நிறுத்தப்பட்டதால் அவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். சுமார் 2 மணி நேரத்திற்கும். மேலாக பேருந்து சுங்கச் சாவடியிலேயே நின்றது .ஒருகட்டத்தில் பயணிகள் ஆவேசம் அடைந்து வாக்குவாதம் செய்த தால், கண்டக்டர் வேறு வழியின்றி தனது சொந்தப் பணத்தை செலுத்தி அங்கிருந்து பேருந்தை எடுக்க நடவடிக்கை எடுத்தார்.

ஜெருசலேம் புனித பயணம்: அரசு மானியம் பெற கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

தூத்துக்குடி, டிச. 29 தூத்துக்குடி மாவட்டத்தில், ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்ட கிறித்தவ மதத்தினர் அரசு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைச் சார்ந்த அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கிய 600 கிறித்தவர்கள் பயனடையும் வகையில் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்டு திரும்பிய 550 கிறித்தவர்களுக்கு நபர் ஒருவருக்கு ரூ.37,000/- வீதமும் 50 கன்னியாஸ்திரிகள் / அருட்சகோதரிகளுக்கு நபர் ஒருவருக்கு ரூ.60,000/- வீதமும் ECS முறையில் நேர டியாக மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் 01.11.2025-க்கு பிறகு ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்ட கிறித்தவ மத பயனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கான விண்ணப்ப படிவத்தினை மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் மாவட்ட பிற்படுத் தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் / சிறுபான்மையினர் நல அலுவலகங்களிலிருந்து கட்ட ணமின்றி பெறலாம். மேலும் www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை 28.02.2026 க்குள் உரிய ஆவணங்களுடன் அனுப்ப வேண்டிய முகவரி - ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலச மஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை - 600 005 என மாவட்ட ஆட்சியர் க.இளம்பக வத் தெரிவித்துள்ளார்.

வி.கே.புரத்தில் மைக்செட் உரிமையாளர் கொலை: உடலை பெற்று கொள்ள உறவினர்கள் சம்மதம்

திருநெல்வேலி, டிச .29- நெல்லை மாவட்டம் அம்பையை அடுத்த வி.கே.புரம் அருகே உள்ள காக்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர் மாரி யப்பன் ( 46). இவர் மைக்செட் வைத்து நடத்தி வந்தார்.இவருக்கு மனைவி மற்றும் 1 மகன் 1 மகள் உள்ளனர். இந்நிலையில் சனிக்கிழமை அன்று இரவில் மாரியப்பன் அந்த பகுதியில் உள்ள தெருவில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது அவரை 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கும்பல் சரமாரி வெட்டிக்கொலை செய்தது. இதுகுறித்து வி.கே.புரம் போலீசார் விசாரணை நடத்தி அப்பகுதியை சேர்ந்த அருண்பாண்டி (19) மற்றும் 17 வயதுக்கு உட்பட்ட 3 சிறு வர்களை கைது செய்த னர். காவல்துறையினர் அவர்களிடம் , நடத்திய விசாரணையில், மாரியப்பன் சமீபத்தில் தங்களை பார்த்து முறைத்த படி சென்றதாகவும், இதுதொடர்பாக தங்க ளுக்கும், மாரியப்பனுக்கும் ஏற்பட்ட சிறு சிறு வாய் தகராறில் ஆத்திரம்அடைந்து 4 பேரும் சேர்ந்து சம்பவத்தன்று மாரி யப்பனை வெட்டிக்கொலை செய்ததாக வும் தெரிவித்தனர்.இதனை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர். இதனிடையே கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி மாரியப்பன் உடலை வாங்க மறுத்து ஞாயிறன்றும் அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் ஆய்வாளர் சுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். கொலையாளிகள் கைது செய்யப்பட்ட நிலையில் திங்களன்று மாரியப்பன் உடலை பெற்றுக்கொள்ள அவர்கள் சம்மதம் தெரிவித்தனர் அதேநேரம் தங்களது ஊருக்கு செல்வதற்கு குறிப்பிட்ட ஒரு சமுதாய மக்கள் வசிக்கும் சாலை வழியாக தான் செல்ல வேண்டி இருக்கிறது. இதனால் அடிக்கடி அவர்களுக்கும், எங்கள் கிராம மக்களுக்கும் தகராறு ஏற்பட்ட வருகிறது, எனவே அவர்கள் வசிக்கும் பகுதி வழியாக செல்லாமல் எங்கள் ஊருக்கு செல்ல தனி பாதை கோரிக்கையை நெல்லை மாவட்ட ஆட்சியர் அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கையும் விடுத்தனர். இதற்கிடையே பாதிக்கப்பட்ட குடும் பத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அம்பை ஒன்றிய செயலாளர் சுரேஷ் மற்றும் தோழர்கள் நேரில் சென்று சந்தித்து நடந்து வற்றைக் கேட்டு ஆறுதல் தெரிவித்தனர்

உரங்களை மொத்தமாக வழங்க கூடாது ஆட்சியரிடம் விவசாயிகள் மனு

திருநெல்வேலி,டிச .29- நெல்லை மாவட்டம் களக்காடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் யூரியா மூடைகள் சிறுகுறு விவசாயிகளுக்கும் கிடை க்கும் வகையில் உள்ளூர் உரக்கடைகளில் விற்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் திங்கட்கிழமையன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். களக்காடு வட்டார விவசாயிகள் அளித்த மனு வில் கூறியிருப்பதாவது: களக்காடு வட்டாரத்தில் நாங்கள் சுமார் 10,000 விவ சாயிகள் வேளாண் தொழில் செய்து வருகிறோம். இவற் றில் பெரும்பாலானோர் சிறு குறு விவசாயிகளாக உள்ளோம். எங்களது வாழ் வாதாரமாக விவசாயமே உள்ளது. விவசாயத்தை தவிர எங்களுக்கு வேறு தொழில் கள் எதுவும் தெரியாது. இந்நி லையில் தற்போது நல்ல மழை பெய்துள்ளதால் பிசானத்தில் நெல் சாகு படி செய்து வருகிறோம். களக்காட்டில் உள்ள உரக் க டைகளில் மொத்தமே 200 மூடையூரியா இருந்த நிலை யில் சிலர் மொத்தமாக 50 மூட்டைகளை கேட்டு உரக் கடைக்காரர்களை நிர்பந்தம் செய்து வருகின்றனர். ஆனால் உரக்கடை நடத்து வோர் விவசாயிகளின் தேவை கருதி 5 அல்லது 6 மூடைகளை மட்டுமே வழங்கி வருகின்றனர். இந்நிலையில் மொத்த மாக உரம் மூட்டைகள் கிடைக்காதவர்கள் அதிகாரி யிடம் தேவையற்ற புகார்க ளை அளிப்ப தோடு, 20 மூடைகளை தங்களுக்கு மொத்தமாக வழங்கிட வேண்டுமென உரக்கடை நடத்துவோரை மிரட்டி வரு கின்றனர்.சிறு குறு விவ சாயிகளான எங்களுக்கு உரங்களை முழு மூடைக ளாக வாங்க வசதியில்லை. உரங்கள் வாங்க எங்களிடம் ரொக்க பணமும் இல்லாத நிலையில் நாங்கள் உள்ளூர் உரக்கடைகளில் கட னுக்கு உரங்கள் வாங்கி அறு வடைக்கு பின்னர் பணம் கொடுத்து வருகிறோம். இந்நிலையில் தேவையற்ற வதந்திகளை கிளப்பி உரக்க டைகளை அடைக்கத் துடிக் கும் நபர்கள் மீது ஆட்சி யர் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் என்றனர்.

பறவைகள் கணக்கெடுப்பில் கலந்து கொண்ட தன்னார்வலர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ்

திருநெல்வேலி ,டிச. 29 பறவைகள் கணக்கெடுப்பில் கலந்து கொண்ட தன்னார்வலர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு திருநெல்வேலி மாவட்ட வன அலுவலர் இளங்கோ பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினார். திருநெல்வேலி வனக்கோட்டத்திற்குட்பட்ட ஈர நிலங்களில் மாவட்ட வன அலுவலர் அறிவுரையின்படி, 27.12.2025 28.12.2025 ஆகிய இரு தேதிகளில் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம், திருப்புடைமருதூர் பறவைகள் பாதுகாப்பகம், விஜயநாராயணம், வேய்ந்தான்குளம், கங்கைகொண்டான், ராஜவள்ளிபுரம் உட்பட மாவட்டத்தின் மிக முக்கியமான நீர்வாழ் பறவைகள் காணப்படும் ஈரநில பகுதிகளில் வனப் பணியாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்கள் கொண்ட குழுவினர் ஆர்வமுடன் கலந்து கொண்டு கணக்கெடுப்பு பணிகள் மேற்கொண்டனர். ஈர நிலங்கள் மற்றும் அதனை சார்ந்துள்ள பசுமையான வயல் வெளிகளில் ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவைகள் காணப்பட்டன. கூழைக்கடா, செங்கால்நாரை, குமிழ்வாய் வாத்து, வரித்தலை வாத்து, நாமக்கோழி, சிவப்புக்கால் உள்ளான், பெரிய கொக்கு, நடுத்தர கொக்கு, பவளநிற அரிவாள் மூக்கன், வெள்ளை அரிவாள் மூக்கன், கருந்தலை அரிவாள் மூக்கன், நீலவால் தாமரைக்கோழி, கானாங்கோழி, ஜம்புக்கோழி போன்ற பறவைகள் காணப்பட்டன.குறிப்பாக குப்பகுறிச்சி மற்றும் கல்குறிச்சி ஈர நிலங்களுக்கு இடையே உள்ள வயல்வெளியில் ஒரே இடத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட கருவாலை மூக்கன் பறவைகள் காணப்பட்டது. இது குறித்து மாவட்ட வன அலுவலர் தெரிவிக்கும் போது: இப்பறவைகள் மத்திய ஆசிய நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நிலவும் கடுமையான குளிர்காலம் காரணமாக தெற்காசிய பகுதிளில் சாதகமான தட்ப வெப்பநிலை மற்றும் உணவு கிடைக்கும் இடங்களுக்கு அக்டோபர் மாதம் முதல் இடம் பெயர்ந்து மார்ச் மாதத்திற்கு பிறகு மீண்டும் மத்திய ஆசிய பகுதிகளுக்கு திரும்பி செல்லும் என்றும், நமது மாவட்டத்தில் அமைந்துள்ள வளமான ஈர நிலங்கள், பறவைகளுக்கு உகந்த தட்பவெப்பநிலை, அமைதியான வயல்வெளிகள் மற்றும் உள்ளுர் மக்களின் ஆதரவு காரணமாக நமது மாவட்டத்திற்கு தொடர்ந்து வெளிநாட்டு பறவைகள் உணவுக்காகவும் இனப்பெருக்கத்திற்காகவும் வருவதாகவும் குறிப்பிட்டார். மேலும், பறவைகள் கணக்கெடுப்பு பணியினை களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பக இயக்குநர் ஆனந்த் மேற்பார்வையிட்டார். தொடர்ந்து இருநாட்கள் பறவைகள் கணக்கெடுப்பில் கலந்து கொண்ட தன்னார் வலர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட வன அலுவலர் பாராட்டுச்சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்தார்.