மெரினா கடற்கரையில் கம்பீரமாக நிற்கும் பொதுத்துறை நிறுவன டாங்கிகள்: நாட்டின் ராணுவ வரலாற்றை அறியும் புதிய வாய்ப்பு
15 Jun 2026, 12:46 am

மெரினா கடற்கரையில் கம்பீரமாக நிற்கும் பொதுத்துறை நிறுவன டாங்கிகள்: நாட்டின் ராணுவ வரலாற்றை அறியும் புதிய வாய்ப்பு

இந்தியாவின் ராணுவப் பெருமையையும், தியாக வரலாற்றையும் மக்களிடையே கொண்டு சேர்க்கும் ஒரு முக்கிய முயற்சியாக, மெரினா கடற்கரை யில் இரண்டு 'சென்சுரியன்' போர் டாங்கிகள் நிறுவப்பட்டுள்ளன.

இந்திய ராணுவத்தின் தென்மண்டல பிரிவு மற்றும் சென்னை மாநகராட்சி இணைந்து மேற்கொண்ட இந்த முயற்சியால், தற்போது பொதுமக்களின் பார்வைக்காக இவை திறந்து வைக்கப்பட்டுள்ளன.

மெரினா கடற்கரை என்பது சென்னையின் அடையாளமாகவும், தினமும் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இடமாகவும் இருப்பதால், ராணுவ வீரத்தின் அடையாளமான இந்த டாங்கிகளை இங்கே நிறுவத் திட்டமிடப்பட்டது.

சென்னை மாநகராட்சியால் இதற்கென பிரத்யேக மேடைகள் அமைக்கப்பட்டு, டாங்கிகளின் முக்கியத்துவத்தை விளக்கும் தகவல் பலகைகளும் வைக்கப் பட்டுள்ளன.

இவை வெறும் காட்சிப் பொருட்கள் மட்டுமல்ல; நாட்டின் பாதுகாப்பு மற்றும் ராணுவ வீரர்களின் தியாகங்களைப் பறைசாற்றும் நினைவிடங்களாக இவை திகழ்கின்றன. சென்னையைப் பொறுத்த வரை, இந்த டாங்கிகளின் வருகை கூடுதல் சிறப்பு வாய்ந்தது.

ஏனெனில், சென்னையின் ஆவடி யில் உள்ள பொதுத்துறை நிறு வனமான கனரக வாகன தொழிற்சாலை (எச்விஎப்) , இன்ஜின் தொழிற்சாலை (இஎப்ஏ) மற்றும் சி.வி.ஆர்.டி.இ (சிவிஆர்டிஇ) போன்ற அமைப்பு கள், இந்தியாவின் கவச வாகன உற்பத்தியிலும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிலும் பெரும் பங்காற்றி வருகின்றன.

இந்தச் சூழலில், போர் டாங்கிகள் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டது மிகவும் பொருத்தமான ஒன்றாகக் கருதப்படுகிறது.

இது குறித்து இந்திய ராணு வம் வெளியிட்டுள்ள செய்தியில், "இந்த டாங்கிகள் வீரம், ஒழுக்கம் மற்றும் தேசப்பற்றின் அடை யாளங்கள். இளைஞர்கள் மற்றும் வருங்கால சந்ததியினருக்கு இவை தேச சேவை குறித்த உத்வேகத்தை அளிக்கும்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தச் போர்ச் சின்னங்களை மிகுந்த மரியாதையுடனும், கண்ணியத்துடனும் பாதுகாக்க வேண்டும் என்று பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழக அரசு, இந்திய ராணுவம் மற்றும் சென்னை மாநகராட்சி ஆகியவற்றின் ஒருங்கிணைந்த முயற்சியால் உருவான இந்தத் திட்டம், ராணுவத்திற்கும் பொதுமக்க ளுக்கும் இடையிலான பிணைப்பை மேலும் வலுப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

மெரினா கடற்கரைக்குச் செல்லும் மக்கள், இந்தியாவின் இந்த வரலாற்றுச் சின்னத்தை நேரில் கண்டு பயன்பெறலாம்.