மத்திய தொழிற்சங்கங்கள் ஆதரவு
9 Apr 2026, 5:30 am

மத்திய தொழிற்சங்கங்கள் ஆதரவு

சேலம், ஏப்.9- மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிப்பதாக மத்திய தொழிற்சங்கங்கள் ஒருங்கிணைப்புக்குழு தெரிவித்துள்ளது. அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் சேலம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள சிஐடியு மாவட்ட குழு அலுவலகத்தில் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் செவ்வாயன்று நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு, சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் எஸ்.கே.தியாகராஜன் தலைமை வகித்தார். இதில் வரும் சட்டமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்களிப்பது எனவும், வரும் 17 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளிலும் தொழிற்சங்கங்களில் சார்பில் தொழிலாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபடுவார்கள் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.கோவிந்தன், ஏஐபிடிசி மாவட்டச் செயலாளர் பொன்னிசாமி, எச்எம்எஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் எஸ்.எம்.எஸ் கணேசன், ஏஐடியுசி ஆர்.மோகனரங்கன், யுடிடியுசி செந்தில் உள்ளிட்ட மத்திய தொழிற்சங்க தலைவர்கள் பங்கேற்றனர்.