மத்திய தொழிற்சங்கங்கள் ஆதரவு
9 Apr 2026, 5:30 am

மத்திய தொழிற்சங்கங்கள் ஆதரவு

சேலம் மாவட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளருக்கு மத்திய தொழிற்சங்கங்கள் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளன. இது தொடர்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவதை எதிர்க்கவும் இந்த கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

கூட்டத்தில் ஏஐடியுசி, சிஐடியு உள்ளிட்ட முக்கிய தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று தங்கள் ஆதரவு நிலைப்பாட்டை உறுதி செய்தனர். வரும் தேர்தலில் தொழிலாளர்கள் அனைவரும் ஒருமித்த கருத்துடன் இந்த கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.