போராடும் தொழிலாளர்களை ஒடுக்கும் பாஜக அரசுக்கு எதிர்ப்பு மத்திய தொழிற்சங்கத்தினர் ஆவேச ஆர்ப்பாட்டம்
13 May 2026, 1:48 am

போராடும் தொழிலாளர்களை ஒடுக்கும் பாஜக அரசுக்கு எதிர்ப்பு மத்திய தொழிற்சங்கத்தினர் ஆவேச ஆர்ப்பாட்டம்

கோவை, மே 12- உரிமைக்கான போராட்டத்தில் ஈடு பட்டுள்ள வடமாநில தொழிலாளர்களை ஒடுக்கும் பாஜக அரசின் நடவடிக்கை களை கண்டித்து, நாடு முழுவதும் மத் திய தொழிற்சங்கத்தினர் ஆவேச ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எட்டு மணி நேர வேலையை உத்திர வாதப்படுத்த வேண்டும்.

தொழிலாளர் நல சட்டங்கள் பாதுகாக்கப்பட வேண் டும். விவசாயிகளின் விலை பொருட்க ளுக்கு உரிய ஆதார விலை வழங்க வேண்டும்.

தொழிலாளர்களை நசுக் கும் தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்களை அமல்படுத்தக் கூடாது. ஒ

ன்றிய பாஜக அரசின் தொழிலாளர் நலச் சட்டங்களை நான்குசட்டத் தொகுப்புகளாக மாற்றியதை கண்டித் தும், நாட்டின் தலைநகர் டெல்லி, நொய்டா, மனோசர், குரு கிராம், பரி தாபாத் உள்ளிட்ட வடமாநிலம் மற்றும் மத்திய இந்தியாவின் பல்வேறு பகுதி களில், தொழிலாளர்கள் தன்னெழுச்சி யான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின் றனர்.

தொழிலாளர் விரோத ஒன்றிய பாஜக அரசின் நடவடிக்கைக்கு எதி ராக கிளர்ந்தெழுந்துள்ள இந்த போராட்டத்தை ஒடுக்கும் வகையில் ஒன்றிய பாஜக அரசு, தொழிலாளர் களை வீட்டு சிறையில் அடைத்து சித்திர வதை செய்து வருகிறது.

ஒன்றிய மோடி அரசின் இந்த ஒடுக்குமுறையை கண்டித்து நாடு தழுவிய போராட் டத்திற்கு மத்திய தொழிற்சங்கங்க ளின் கூட்டமைப்பு கண்டனம் முழங்க அறைகூவல் விடுத்தது.

இதன்ஒருபகுதி யாக, சிறைவைக்கப்பட்டுள்ள தொழி லாளர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், தொழிலாளர் விரோத சட்டத்தொகுப்பை திரும்பப் பெற வேண்டும். இந்திய தொழிற்சங்க மாநாட்டை உடனே கூட்டி முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும், மாதம் ரூ.26ஆயிரம் குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண் டும், ஒப்பந்த முறையை நிரந்தரமாக ஒழிக்க வேண்டும் என்பதை வலியு றுத்தி தமிழ்நாடு முழுவதும் சிஐடியு, எல்பிஎப், ஏஐடியுசி, ஐஎன்டியுசி, ஹெச்எம்எஸ், ஏஐசிசிடியு, ஏஐயுடியு சியு, யுடியுசி உள்ளிட்ட அனைத்து மத் திய தொழிற்சங்கங்கள் சார்பில் செவ்வாயன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்ஒருபகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகி லுள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ். கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். இதில், சிஐடியு மாவட்டத் தலைவர் கே.

மனோகரன், மாநிலக் குழு உறுப்பினர் சத்யா, எல்பிஎஃப் சார்பில் சிடிசி பி.துரை, ராக்கி முத்து, ஏஐடியுசி முன் னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆறு முகம், சி.தங்கவேல், ஐஎன்டியுசி பாசம லர் பி.சண்முகம், என்.புவனேஸ்வரி, எச்எம்எஸ் டி.எஸ்.ராஜாமணி, ஜி.மனோ கரன், டிடிஎம்எஸ் மு.தியாகராசன், ப.சர வணகுமார், ஏஐசிசிடியு க.பாலசுப்பிர மணியன், பிலோமினா, எம்எல்எப் ஷாஜ கான், பாஸ்டின் ராஜ், எஸ்டிடியு ஹக்கீம், சி.தாஜூதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.

சேலம் சேலம் மெய்யனூர் போக்குவரத்து பணிமனை முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு சிஐடியு மாவட்டத் தலை வர் டி. உதயகுமார் தலைமை வகித் தார். சிஐடியு சுமைப்பணி தொழிலாளர் சம்மேளன மாநிலத் தலைவர் ஆர்.வெங்கடாபதி சிறப்புரையாற்றினார்.

இதில் சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.கோவிந்தன், மாவட்டப் பொருளா ளர் வி.இளங்கோ, எல்பிஎப் நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி, ஏஐடியுசி நிர்வாகி முனுசாமி, ஹச்எம்எஸ் நிர்வாகிகள் கணேசன், ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நாமக்கல் நாமக்கல் மாவட்டம், திருச்செங் கோடு அண்ணா சிலை முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, ஏஐடியுசி மாவட்ட பொதுச்செயலாளர் பி.தன சேகரன், சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.

அசோகன், ஹெச்எம்எஸ் மாவட்டச் செயலாளர் ஏ.கலைவாணன், யுடியுசி மாவட்டச் செயலாளர் வி.பழனிச்சாமி ஆகியோர் தலைமை தாங்கினர்.

ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை விளக்கி ஏஐடியுசி மாவட்டச் செயலா ளர் எஸ்.ராமகிருஷ்ணன், சிஐடியு மாவட்டச் செயலாளர் என்.வேலுச்சாமி, மாவட்ட உதவித் தலைவர் எம்.செங் கோடன், உதவி செயலாளர் சு.சுரேஷ், விதொச மாவட்டச் செயலாளர் சி.ஜெய ராமன், யுடியுசி மண்டல செயலாளர் எம். தண்டபாணி, ஹெச்எம்எஸ் மாவட்டத் தலைவர் தேவராஜன் ஆகியோர் சிறப்பு ரையாற்றினர். ஏஐடியுசி மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.கோபிராஜ் நன்றி கூறினார். தருமபுரி தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாநில தணைத்தலைவர் சசி. நாகராசன் தலைமை வகித்தனர்.

எல்பிஎப் மாவட்டத் தலைவர் அன்பு மணி, செயலாளர் சண்முகராஜா, ஐஎன் டியுசி மாவட்டத் தலைவர் சிவலிங்கம், ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் கே. மணி, ஏஐசிசிடியு மாவட்டச் செயலா ளர் சி.முருகன், எச்எம்எஸ் மாவட்டச் செயலாளர் அர்ஜுனன், சிஐடியு மாவட்டப் பொருளாளர் எஸ்.சண்மு கம், மாவட்ட நிர்வாகிகள் ஏ.சேகர், சி. முரளி, சி.ரகுபதி, கவிதா, சி.அங்கம் மாள் உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசி னர். திருப்பூர் திருப்பூர் தியாகி குமரன் நினைவ கம் முன்பாக செவ்வாயன்று மத்திய தொழிற்சங்கங்களின் சார்பில் நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு யுடியுசி சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சதீஷ் சங்கர் தலைமை ஏற்றார்.

இதில் சிஐ டியு, ஏஐடியுசி, எல்பிஎப், ஐஎன்டியுசி, எச்எம்எஸ், ஏஐசிசிடியு, யுடியுசி ஆகிய மத்திய தொழிற்சங்கங்களின் சார்பில் நிர்வாகிகள் தொழிலாளர்கள் பங் கேற்று முழக்கங்கள் எழுப்பினர்.

கோரிக்கைகளை வலியுறுத்தி எச்எம்எஸ் மாவட்டச் செயலாளர் ஆர்.

முத்துச்சாமி, ஐஎன்டியுசி நிர்வாகி சுந்தர் ராஜ், எல்பிஎப் மாவட்டப் பொருளாளர் ரங்கசாமி, ஏஐடியுசி மாவட்டப் பொதுச் செயலாளர் பி.ஆர்.நடராஜன், சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ் ஆகியோர் உரையாற்றினர்..