மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு இன்று தொடக்கம்
7 Feb 2026, 2:02 pm
<p><strong>மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு இன்று தொடக்கம்</strong></p>
<p>சென்னை, பிப்.7- மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு நாடு முழுவதும் சனி, ஞாயிறு ஆகிய இரு நாள்கள் நடைபெறு கிறது. ஒன்றிய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி ஆசிரி யர் பணியில் சேர ‘சிடெட்’ என்ற மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இரு தாள்கள் கொண்ட இந்தத் தேர்வு, மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தால் ஆண்டுதோறும் ஜூலை மற்றும் டிசம்பரில் நடத்தப் பட்டு வருகிறது. இடைநிலை ஆசிரியர் பணிக்கு முதல் தாள் தேர்வும், பட்டதாரி ஆசிரி யர் பணிக்கு 2 ஆம் தாள் தேர்வும் நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வில் ஒருமுறை தேர்ச்சி பெற்றால் அதன் சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லத்தக்கது. அதன்படி நிக ழாண்டுக்கான சிடெட் தேர்வு சனி, ஞாயிறு ஆகிய இரு நாள்கள் நடத்தப்படவுள்ளன. இந்த தேர்வெழுத விண்ணப் பித்தவர்களுக்கு தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு கடந்த வியாழக் கிழமை வெளியிடப்பட்டது. அதன் விவரங்களை பட்டதாரிகள் இணைய தளத்தில் அறியலாம். மேலும், சிடெட் தேர்வு மொத்தம் 150 மதிப் பெண்களுக்கு தமிழ் உள்பட 20 மொழிகளில் நேரடி முறையில் நடைபெறும். இதுதவிர பட்டதாரிகள் தேர்வு மையத்துக்கு காலை அமர்வுக்கு 9.30 மணிக்கும், மதியம் 2.30 மணிக்கும் முன்பாக வர வேண்டும். தேர்வுக்கூட அனுமதிச் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளைப் பின்பற்றி தேர்வறையில் செயல்பட வேண்டும். தேர்வின்போது ஏதே னும் முறைகேடுகளில் ஈடுபட்டால் அவர்களின் தேர்ச்சி ரத்து செய்யப் படுவதுடன், எதிர்காலத் தேர்வுகளில் பங்கேற்க தடையும் விதிக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p>
<p> </p>
