மத்திய கைலாஷ் சந்திப்பு மேம்பாலம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
15 Feb 2026, 3:03 pm
<p><strong>மத்திய கைலாஷ் சந்திப்பு மேம்பாலம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்</strong></p>
<p>சென்னை,பிப்,15- சென்னை – அடையாறில் 60 கோடியே 68 லட்சம் ரூபாய் செலவில் ராஜீவ் காந்தி சாலை மற்றும் சர்தார் பட்டேல் சாலையை இணைக்கும் மத்திய கைலாஷ் சந்திப்பில் கட்டப் பட்ட மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஞாயிறன்று (பிப்,15) திறந்து வைத்தார். ராஜீவ் காந்தி சாலையானது மத்திய கைலாஷ் பகுதியில் சர்தார் பட்டேல் சாலையிலிருந்து தொடங்குகிறது. இந்த இரண்டு சாலைகளும் சந்திக் கும் இடம் “டி ” வடிவிலானதாகும். இச்சாலை சந்திப்பில், அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் தொடங்கும் நேரத்திலும் முடிவுறும் நேரத்திலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பொதுமக்கள் மிகுந்த சிரமத்துடனும், காலவிரயத்துடனும் இச்சாலையை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. சர்தார் பட்டேல் சாலையிலிருந்து ராஜீவ் காந்தி சாலைக்கு செல்லும் வாக னங்கள் அனைத்தும் தற்போது அமைக்கப்பட்டுள்ள இருதட ஒரு வழிச்சாலை மேம்பாலத்தினை பயன் படுத்தும்படி கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளனர். அவ்வாறு, கிண்டியிலிருந்து ராஜீவ் காந்தி சாலைக்கு (ஓஎம்ஆர்) செல்லும் வாகனங்கள் அனைத்தும் இப்பாலத் தினை பயன்படுத்தும்போது அடை யாறு பகுதியிலிருந்து கிண்டி நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் எவ்வித தங்குதடையின்றி செல்ல வழி ஏற்படும். மத்திய கைலாஷ் சந்திப்பில் அமை க்கப்பட்டுள்ள போக்குவரத்து சமிக்ஞையும் விலக்கிக் கொள்ளப் படும். மேலும், கிண்டியிலிருந்து அடை யாறுக்கும், ஓஎம்ஆர் சாலையிலிருந்து கிண்டிக்கும் செல்லும் வாகனங்கள் இலகுவாக இடதுபுறப் பயணம் மேற் கொள்ள இயலும். இந்த மேம்பாலம் இருவழித் தடம் அகலம் கொண்டதாகவும், ஒரு வழி வாகன போக்குவரத்து கொண்ட தாகவும், வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாலத்தின் மொத்த நீளம் அணுகு சாலை உட்பட 652 மீட்டர் ஆகும். கூடுதல் பாதுகாப்புக்காக பாலத் தின் இருபுறமும் அமைக்கப்பட்டுள்ள தடுப்புசுவரின் உயரமும் அதிகரிக் கப்பட்டு, வாகனங்கள் இவ்வளைவில் செல்லும் போது சிரமமின்றி கடந்து செல்லும் வண்ணம் குறுக்குவெட்டு சாய்வுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த வளைவுப் பகுதி யில் எவ்வித பயமின்றி பொதுமக்கள் பயணிக்கலாம். எனினும், பாலத்தின் மீதான பயணத்திற்கு வேக கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வேக கட்டுப்பாட்டிற்கான எச்சரிக்கை பலகைகள் பாலத்தின் தடுப்புச்சுவரில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மேம்பாலம் திறக்கப்படுவதன் மூலம் ராஜீவ் காந்தி சாலை, கிண்டி, அடையாறு, மத்திய கைலாஷ் ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் குறைவதோடு, பொதுமக்களின் பயண நேரமும் குறையும் என்று நெடுஞ் சாலைகள் துறை தெரிவித்துள்ளது.</p>
