முந்தய பக்கம்

கப்பல்களில் இந்திய மாலுமிகளைப் பணியமர்த்த வேண்டாம் ஒன்றிய அரசு உத்தரவு

16 Jul 2026, 9:06 pm
கப்பல்களில் இந்திய மாலுமிகளைப்  பணியமர்த்த வேண்டாம் ஒன்றிய அரசு உத்தரவு

கப்பல்களில் இந்திய மாலுமிகளைப் பணியமர்த்த வேண்டாம் ஒன்றிய அரசு உத்தரவு

ஈரான் மற்றும் அமெரிக்கா இடை யேயான மோதல் போக்கு நீடித்து வருவதால், ஹோர்முஸ் நீரிணை பகுதியில் பாதுகாப்புச் சூழல் மிகவும் மோசமடைந்துள்ளது. இத னால் ஹோர்முஸ் நீரிணை பகுதியை நோக்கி செல்லும் கப்பல்களில் இந்திய மாலுமிகளைப் பணியமர்த்துவதை வேண்டாம் என ஒன்றிய அரசு உத்தர விட்டுள்ளது.

இதுதொடர்பான உத்தரவில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,”இந்திய கப்பல் போக்குவரத்துத் தலைமை இயக்குநர கம், கப்பல் உரிமையாளர்கள், மேலாளர் கள் மற்றும் ஆட்சேர்ப்பு முகமைகள் ஹோர்முஸ் நீரிணை வழியாகப் பயணம் செய்யும் கப்பல்களில் இந்திய மாலுமி களைப் பணியமர்த்துவதை மறுஉத்தரவு வரும் வரை நிறுத்த வேண்டும்.

இந்தத் தடை தவிர, அந்தப் பகுதிகளில் இயங்கும் கப்பல்கள், தங்களின் பாது காப்பை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் ; சர்வதேச கப்பல் பாதுகாப்பு விதிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் ; எச்சரிக்கைகளை உன்னிப் பாகக் கவனிக்க வேண்டும்” என ஒன்றிய கப்பல் போக்குவரத்துத் துறை அறி வுறுத்தியுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram