தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஒன்றிய அரசின் புதிய பி.எட். படிப்பு: குழப்பத்தில் பல்கலைக்கழக அதிகாரிகள்

12 Apr 2026, 5:30 am
ஒன்றிய அரசின் புதிய பி.எட். படிப்பு: குழப்பத்தில் பல்கலைக்கழக அதிகாரிகள்

ஒன்றிய அரசின் புதிய பி.எட். படிப்பு: குழப்பத்தில் பல்கலைக்கழக அதிகாரிகள்

சென்னை, ஏப்.11 - தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவிருப்பதால், ஒன்றிய அரசின் புதிய பி.எட் படிப்பு குறித்து ஆட்சியாளர்கள் எந்த முடிவும் எடுக்க முடியாத நிலையில் கல்வித்துறை அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர்.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சார்பில் வழங்கப்பட்டு வந்த 4 ஆண்டு கால ஒருங்கிணைந்த பி.எட். படிப்புகளுக்கு மாற்றாக, தேசிய கல்விக் கொள்கை 2020-இன் அடிப்படையில் ஒன்றிய பாஜக அரசு ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வித் திட்டத்தை 2026-2027 கல்வியாண்டு முதல் செயல்படுத்த உத்தரவிட்டுள்ளது.

இதனால் வரும் கல்வியாண்டில் தற்போதைய படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுமா எனப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. புதிய திட்டம் அவசரமான நிலை, ஆயத்த நிலை, இடைநிலை, முதன்மை நிலை என நான்கு கட்டங்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு நிலையிலும் வெளிவரும் மாணவர்களுக்கு முறையே சான்றிதழ், டிப்ளமோ, பட்டயப் படிப்பு, இளநிலைப் பட்டப் படிப்பு சான்றிதழ்கள் வழங்கப் படும்.

இருப்பினும் தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மாட்டோம் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், தேர்தல் காலத்தில் புதிய முடிவெடுக்க இயலாத நிலையிலும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுக்க முடியாமல் இக்கட்டான சூழலில் இருக்கிறது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.