தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஒன்றிய அரசு ஆண்டுக்கு ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கினால், 35 கோடி முறைசாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு வழங்க முடியும்!

yesterday
ஒன்றிய அரசு ஆண்டுக்கு ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கினால், 35 கோடி  முறைசாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு வழங்க முடியும்!
<p><strong>ஒன்றிய அரசு ஆண்டுக்கு ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கினால், 35 கோடி முறைசாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு வழங்க முடியும்!</strong></p><p>திருப்பூர், ஜூன் 21- ஒன்றிய அரசு, ஆண்டுக்கு ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கினால், இந் தியாவில் 35 கோடி முறைசாரா தொழிலாளர்கள், சமூக பாது காப்பு பெறுவார்கள் என்று சிஐடியு மாநிலச் செயலாளர் டி.குமார் கூறி னார். திருப்பூர் மாவட்ட சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தின் 48 ஆவது மகாசபை கூட்டம், திருப்பூர் பார்க் சாலை, கேஎஸ்ஆர் திருமண மண்ட பத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.ராஜகோபால் தலைமை வகித் தார். மகாசபையை துவக்கி வைத்து, சிஐடியு மாநிலச் செயலா ளர் டி.குமார் பேசுகையில், இந்தியா வில் சுமைப்பணியில் கோடிக் கணக்கானவர்கள் வேலை செய் கின்றனர். முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்தில் முறைசாரா தொழி லாளர்களுக்கு சமூக பாதுகாப்பு நிதியாக ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. அதற்குப்பிறகு மோடி தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சிக்காலத்தில் எந்த நிதி யும் ஒதுக்கவில்லை. தற்போது 35 கோடி பேர் முறைசாரா தொழிலா ளர்களாக உள்ளனர். இவர்க ளுக்கு ஆண்டுக்கு ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்தால், குறைந்தபட்ச சமூக பாதுகாப்பை உத்திரவாதப்படுத்த முடியும். ஓய்வூதியம், குழந்தைகளுக்கு கல்வி உதவி, திருமண உதவித் தொகை ஆகியவற்றை வழங்க முடி யும். ஆனால் ஒன்றிய அரசு கோடிக் கணக்கான தொழிலாளர்களுக்கு செய்ய வேண்டிய வேலைகளை செய்யாமல் மிகப்பெரும் கார்ப் பரேட் நிறுவனங்களுக்கு சாதக மாக செயல்படுகிறது. பொதுத் துறை நிறுவனங்களை கார்ப்ப ரேட்டுகளுக்கு தாரை வார்க்கிறது. தொழிலாளர்கள் தோளில் போட்டுள்ள சிவப்பு துண்டு சாதி, இன ஒடுக்குமுறை, அநீதிக்கு எதி ராக தொழிலாளி வர்க்கம் என ஒன்று படுத்தக்கூடிய அடையாளம் ஆகும். எனவே மிக பெரும பான்மையாக உள்ள முறைசாரா தொழிலாளர்களை சங்கமாக அணி திரட்ட வேண்டும், என்றார். இதைத்தொடர்ந்து, சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.பாலன் வேலை அறிக்கையை முன்வைத் தார். சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் கே.உன்னிகிருஷ்ணன், சங்கத்தின் மாவட்டப் பொருளார் டி.ஜெயபால், சுமைப்பணி சம்மேள னக்குழு உறுப்பினர் எஸ்.எம்.பழ னிச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். இக்கூட்டத்தில், சுமைப் பணி தொழிலாளர்களுக்கு சட்ட, சமூக பாதுகாப்பு மற்றும் சாலை யோரங்களில் தொழிலாளர்க ளுக்கு ஓய்வு பந்தல் அமைக்க அனு மதிக்க வேண்டும், பொதுக் கழிப் பிட வசதி வேண்டும். நலவாரிய பணப்பயன்களை அதிகப்படுத்த வேண்டும், குட்செட், நுகர்வோர் வாணிபக்கழக உணவுக் கிடங்கு, டாஸ்மாக் குடோன், மார்க்கெட் ஆகிய பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும், லாரி ஆபீஸ், வர்த்தக நிறுவனங் களில் பணி செய்யும் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு இஎஸ்ஐ., பிஎப் திட்டங்களை அமலாக்க வேண்டும். 55 கிலோவிற்கு மேல் மூட்டை எடையை அதிகப்படுத் தக்கூடாது, வீடில்லாத சுமைப் பணி தொழிலாளர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா, வீடு கட்ட நிதி உதவி வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன. இதைத்தொடர்ந்து, சங்கத்தின் மாவட்டத் தலைவராக எம்.ராஜ கோபால், செயலாளராக பி. பாலன், பொருளாளராக டி.ஜெய பால், துணைத்தலைவர்களாக மணி என்கிற நடராஜ், பி.தங்க வேல், அப்பாசாமி, துணைச் செயலாளர்களாக மார்க்கெட் ஜெ. ஜெயராம், டாஸ்மாக் கார்த்திக், குட் செட் செல்வம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். நிர்வாகிகள் உட் பட 21 பேர் கொண்ட கமிட்டி தேர்வு செய்யப்பட்டது. சுமைப்பணி தொழிலாளர் சம்மேளன மாநிலத் தலைவர் ஆர்.வெங்கடபதி நிறை வுரையாற்றினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.