'ஜின்லி-1' மருந்துகளுக்கு ஒன்றிய அரசு கட்டுப்பாடு
2 Apr 2026, 5:30 am

'ஜின்லி-1' மருந்துகளுக்கு ஒன்றிய அரசு கட்டுப்பாடு

புதுதில்லி: உடல் பருமன் மற்றும் டைப் 2 நீரிழிவு நோய் மற்றும் உடல் பருமனைச் சரி செய்ய உதவும் 'ஜின்லி-1' (GLP-1) மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்திய சந்தையில் சமீபகாலமாக இந்த ஜின்லி-1 மருந்துகள் பல்வேறு வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

தற்போது மருந்தகங்கள், ஆன்லைன் தளங்கள், மொத்த விற்பனையாளர்கள் மற்றும் நல்வாழ்வு மையங்கள் மூலம் எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி ஜின்லி-1 எளிதாகக் கிடைப்பது கவலைகளை ஏற்படுத்தியுள்ளன. இதற்கு மருந்து தயாரிப்புச் சங்கங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், ஜின்லி-1 மருந்துகளுக்கு ஒன்றிய அரசு புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது. அதில், 'ஜின்லி-1 மருந்துகள், மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இருந்தால் மட்டுமே வழங்கப்பட வேண்டும். இவை கடுமையான பக்கவிளைவுகளைக் கொண்டிருப்பதால், தகுதியாய்ந்த மருத்துவ நிபுணரின் மேற்பார்வையில் மட்டுமே எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.

விதிமுறைகளை மீறும் வணிக நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்படும், அபராதம் விதிக்கப்படும் மற்றும் சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படும்' என ஒன்றிய அரசு புதனன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.