அதானி குழும நிறுவனங்கள் மீது ஒன்றிய அரசின் விசாரணை
2 Apr 2026, 5:30 am

அதானி குழும நிறுவனங்கள் மீது ஒன்றிய அரசின் விசாரணை

அதானி குழுமத்தைச் சேர்ந்த நிறுவனங்கள் மீது நிறுவனங்கள் சட்ட விதிகளை மீறியதாக எழுந்துள்ள புகார்கள் குறித்து ஒன்றிய அரசு விசாரணை நடத்தி வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் ஆர்.சச்சிதானந்தம் எழுப்பிய கேள்வி மூலம் உறுதியாகியுள்ளது.

அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் மீது அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. அதானி பவர் நிறுவனம் சட்ட விதிகளை முறையாகப் பின்பற்றாதது கண்டறியப்பட்டு, அந்த நிறுவனத்தின் மீது அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளதாக அரசு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

அரசின் இந்தப் பதில் குறித்து ஆர்.சச்சிதானந்தம் எம்.பி. கூறுகையில், அதானி போர்ட்ஸ் மீதான விசாரணை விரைந்து முடித்து உண்மைகளை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்றும், சட்டப்படி நடவடிக்கை எடுப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.