குடும்ப அட்டைக்கு இனி 35 கிலோ அரிசி கிடையாதா? ஏழை மக்களின் வயிற்றிலடிக்கும் மோடி அரசின் புதிய சட்டத்திருத்தம்!
7 Jul 2026, 9:58 pm

குடும்ப அட்டைக்கு இனி 35 கிலோ அரிசி கிடையாதா? ஏழை மக்களின் வயிற்றிலடிக்கும் மோடி அரசின் புதிய சட்டத்திருத்தம்!

சென்னை, ஜூலை 7 - ஆதரவற்றோர், ஏழைகளின் வயிற்றில் அடிக் கும் வகையில், உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யும் முடிவை, ஒன்றிய பாஜக அரசு கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து, கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:

நபர் ஒருவருக்கு 7 கிலோ தானியம்

அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தின்படி (AAY) பயனாளிகளுக்கு மாதந்தோறும் குடும்பத் திற்கு 35 கிலோ இலவச அரிசி அல்லது கோதுமை வழங் கும் ஏற்பாடு உள்ளது. இந்நிலையில், ஒன்றிய பாஜக அரசு தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் (NSA) திருத்தம் கொண்டு வந்து, நபர் ஒருவருக்கு 7 கிலோ என்ற வகையில் அரிசி அல்லது கோதுமை கொடுக்கப்படும் என்றும் ஒரு நபராக இருந்தால் 7 கிலோ, இரண்டு நபர்கள் கொண்ட குடும்பத்திற்கு 14 கிலோ, நான்கு நபர்கள் கொண்ட குடும்பத்திற்கு 28 கிலோ என்று குறைப்பதற்குத் திட்டமிட்டுள்ளது. 5 நபர்களுக்கு அதிகமாக எத்தனை பேர் இருந்தா லும் அந்தக் குடும்பத்திற்கு 35 கிலோ மட்டுமே என்றும் மாற்றத் திட்டமிட்டிருக்கிறது.

35 கிலோ தானியம் உச்ச வரம்பு ஏன்?

இதன்படி அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தின் கீழ், மாநிலங்களுக்கு வழங்கப்படும் 99 லட்சம் டன் தானியம் என்பது குறைக்கப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. நபர் வாரியாக கொடுக் கிறோம் என்றாலும் 5 பேருக்கு அதிகமாக இருக்கும் குடும்பங்களுக்கு அதற்கேற்ப தானியத்தை அதிக மாக தர வேண்டும். அதற்கு மாறாக உச்சவரம்பு 35 கிலோ என்று வைத்துவிட்டு, தானியத்தைக் குறைப் பது என்பது மிகவும் வறுமையிலும், ஆதரவற்ற நிலையிலும் இருக்கக் கூடிய தனி நபர்கள் அல்லது வறுமையில் உழலும் குடும்பங்களை வெகுவாக பாதிக்கும். தமிழகத்தில் 70 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள் இந்த சட்டத் திருத்தத்தால், தமிழகத்தில் மட்டும் அந்தியோதயா அன்னயோஜனா அட்டை வைத்திருக் கும் 18 லட்சத்து 64 ஆயிரம் குடும்பங்களும், சுமார் 70 லட்சம் மக்களும் பாதிக்கப்படுவார்கள். இதுபோன்று அனைத்து மாநிலங்களுமே பாதிக்கப்படும் வாய்ப் பிருக்கிறது. 2011-12க்கு பிறகு தனிநபர் உணவு நுகர்வு குறித்த கணக்கீடுகள் நடத்தப்படவில்லை. விலை வாசி நுகர்வு குறியீட்டு எண்ணை மாற்றி அமைப்ப தற்காக 2023-24 ஆம் ஆண்டில் தான் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போதே இந்த கணக் கெடுப்பு, தொழிலாளர்களையும் அரசிடமிருந்து இலவசமாக உணவு பெறும் குடும்பங்களையும் பாதிக்கும் என்று சொல்லப்பட்டது. இப்போது அது உண்மையாகியிருக்கிறது.

தட்டிலிருக்கும் உணவுக்கு உச்சவரம்பு நிர்ணயிப்பதா?

இந்தியாவில் பன்முக வறுமை (Multidimensional Poverty) விகிதம் 16.96 சதவிகிதம். இந்நிலையில் உத்தேசிக்கப்பட்டுள்ள இந்த மாற்றம் அமலுக்கு வருமானால் நிச்சயமாக பல மாநிலங்களில் பன்முக வறுமை நிலை விகிதம் அதிகரிக்கக் கூடும். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு லாபத்தில் உச்ச வரம்பு வைக்காத பாஜக அரசு ஏழை - எளிய ஆதர வற்ற மக்களின் சாப்பாட்டுத் தட்டில் இருக்கும் உண வுக்கு உச்சவரம்பு விதிப்பது கொடூரமான செயலாகும்.

திருத்தச் சட்ட முடிவை கைவிட வேண்டும்!

எனவே, ஒன்றிய பாஜக அரசு உணவுப் பாது காப்பு திருத்தச் சட்ட வரைவில் உத்தேசிக்கப்பட்டுள்ள இந்த திருத்தங்களை உடனடியாக கைவிட வேண்டு மெனவும், நடைமுறையில் உள்ள குடும்ப அட்டைக்கு 35 கிலோ உணவு தானியம் வழங்குவது தொடர வேண்டுமெனவும் ஒன்றிய அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலி யுறுத்துகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.