உரங்கள் விலையை உயர்த்திய ஒன்றிய அரசு; மே 26 விவசாயிகள் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்
20 May 2026, 9:41 pm

உரங்கள் விலையை உயர்த்திய ஒன்றிய அரசு; மே 26 விவசாயிகள் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை, மே 20 - ரசாயன உரங்கள் விலையை உயர்த்தி விவசாயிகளை வஞ்சிக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்தும், விலை உயர்வை உடனே ரத்து செய்யக் கோரியும் மே 26 ஆம் தேதி தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளன.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் மாநிலப் பொதுச் செய லாளர்கள் பி.எஸ்.மாசிலாமணி (சிபிஐ), சாமி.நடராஜன் (சிபிஐ(எம்)) ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு 2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வருவ தற்கு முன்பாக இந்திய நாட்டு விவசாயி களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்தார்கள்.

அதில் மிக முக்கியமானது, விவசாயி கள் உற்பத்தி செய்திடும் அனைத்து விளை பொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சாமி நாதன் குழு பரிந்துரைப்படி, உற்பத்தி செலவு களோடு 50 சதவீதம் கூடுதலாக சேர்த்து (சி2+50) அடிப்படையில் வழங்குவோம் எனவும், குறைந்தபட்ச ஆதார விலைக்கான சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறை வேற்றுவோம் எனவும் வாக்குறுதி கொடுத்தனர்.

ஆனால், ஆட்சிக்கு வந்து 12 ஆண்டுகள் கடந்த பின்பும் விவசாயி களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றவில்லை.

வேளாண் உற்பத்தி செலவுகள் உயர்ந்து கொண்டே செல்கிறது.

மறுபுறம் விவசாயிகள் உற்பத்தி செய்திடும் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் தற்கொலை அதிகரித்து வரும் நிலையில், தற்போது ஒன்றிய அரசு ரசாயன உரங்களின் விலையை கடுமையாக உயர்த்தியுள்ளது.

50 கிலோ பாக்டம்பாஸ் 20:20 400 ரூபாய் விலை உயர்த்தப்பட்டு ரூ.2150-க்கு விற்கப்படுகிறது.

பொட்டாஷ் 1975 ரூபாயி லிருந்து 275 ரூபாய் உயர்ந்து 2150 ரூபாயாக வும், காம்ப்ளக்ஸ் 10:26:26 2200 ரூபாயி லிருந்து 250 ரூபாய் உயர்த்தப்பட்டு, 2450 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அம்மோனியம் சல்பேட் ரூ.1200-லிருந்து 200 ரூபாய் உயர்த்த ப்பட்டு ரூ.1400-க்கு விற்கப்படுகிறது.

இந்த விலை ஏற்றம் இதோடு நிற்கப் போவ தில்லையாம். அடுத்தடுத்த மாதங்களில் மேலும் ரசாயன உரங்களின் விலை உயரும் என செய்திகள் வருகின்றன.

ஒன்றிய அரசின் தவறான வேளாண் கொள்கைகளால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு, ரசாயன உரங்களின் கடுமையான விலை உயர்வு மேலும் ஒரு இடியாகும்.

எனவே, ஒன்றிய அரசின் உரவிலை உயர்வை தமிழ்நாடு விவ சாயிகள் சங்கங்கள் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.

உயர்த்தப்பட்ட ரசா யன உரங்களின் விலையை உடனே ரத்து செய்திட ஒன்றிய அரசை வலியுறுத்து கிறோம்.

மேலும் தமிழ்நாட்டில் புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் வாக்குறுதியாக, ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் கூட்டுறவு பயிர்க் கடனை தள்ளுபடி செய்வோம் என்று அறி வித்திருந்தது. ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள முதல்வர் ச.ஜோசப் விஜய், விவசாயிகள் பயிர்க் கடன் தள்ளுபடி குறித்து எந்த விதமான அறிவிப்பும் வெளியிடாமல் உள் ளார்.

தற்போது மாநிலம் முழுவதும் பயிர்கடன் பெற்ற விவசாயிகள் கடனை திருப்ப செலுத்த வேண்டிய காலமாக உள்ள தால் மாநில அரசு உடனடியாக கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும் என சிபிஐ(எம்), சிபிஐ தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் சார்பில் மாநில அரசை வலியுறுத்துகிறோம்.

ஒன்றிய அரசின் உரவிலை உயர்வை உடனே ரத்து செய்யக் கோரியும், மாநில அரசு கூட்டுறவு பயிர்கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும், 26.05.2026 அன்று மாநிலம் முழுவதும் சிபிஐ(எம்), சிபிஐ தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.