‘சென்ட்ரல் பேங்க்’ பணம் ரூ. 13.97 கோடி கையாடல் நாடாளுமன்ற நிலைக்குழு மேற்பார்வையில் தடயவியல் விசாரணை நடத்த வேண்டும்! சு. வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தல்
28 Oct 2026, 10:31 pm

‘சென்ட்ரல் பேங்க்’ பணம் ரூ. 13.97 கோடி கையாடல் நாடாளுமன்ற நிலைக்குழு மேற்பார்வையில் தடயவியல் விசாரணை நடத்த வேண்டும்!

சு. வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தல்

மதுரை, அக். 28 -இந்திய ரிசர்வ் வங்கியால் (RBI) பராமரிக்கப்படும் ‘சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா’வின் தீர்வு கணக்கில் சுமார் ரூ. 13.97 கோடி கையாடல் நடந்திருப்பதுஅதிர்ச்சி அளிப்பதாகவும், இதுதொடர்பாக நாடாளுமன்ற நிலைக்குழுவின் மேற்பார்வையில், உடனடியாக தடயவியல் தொழில்நுட்பத் தணிக்கையையும் (Forensic Technical Audit), விரிவான தடயவியல் விசாரணையையும் நடத்தவேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக, ஒன்றிய அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு விரிவான கடிதம் ஒன்றை அவர்எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

‘சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா’ குற்றச்சாட்டு

இரண்டு நாட்களுக்கு முன்புதான், அதாவது 23 அக்டோபர் 2026 அன்று, ‘ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா’ (SBI) வங்கியின் தரவுகள் திருடப்பட்டது தொடர்பாகத் தங்களுக்குக் கடிதம் எழுதியிருந்தேன். இன்று, இந்நாட்டின் குடிமக்கள் அனைவருக்கும் மிகுந்த கவலையளிக்கும் மற்றொரு பிரச்சனை தொடர்பாக மீண்டும் தங்களுக்குக் கடிதம் எழுதுகிறேன்.பொதுத்துறை வங்கியான ‘சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா’வின், ரிசர்வ் வங்கியில் உள்ள அதன் தீர்வுக்கணக்கிலிருந்து (Settlement Account) ரூ.13.97 கோடி முறைகேடாகக் கையாடல் செய்யப்பட்டுள்ளதாக அந்த வங்கி குற்றம் சாட்டியிருப்பது உண்மையிலேயே அதிர்ச்சியளிக்கிறது. இந்த மோசடி நடைபெற்ற விதம் பெரும் வியப்பை ஏற்படுத்துகிறது.

3 நாட்களில் ரூ. 13.97 கோடி 36 கணக்குகளுக்கு பரிமாற்றம்

‘சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா’, இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) பராமரிக்கப்படும் தனது தீர்வுக் கணக்கிலிருந்து, அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்ட 187 பரிவர்த்தனைகள் மூலம்சுமார் ரூ. 13.97 கோடி பணம் மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்தப் பணப் பரிமாற்றங்கள் 2026 அக்டோபர் 15 முதல் 17 வரை, மூன்று நாட்களில் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இந்தப் பணம் 36 வங்கிகளில் உள்ள கணக்குகளுக்குப் பரிமாற்றம்செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஆர்பிஐ கட்டமைப்பிற்குள் நடந்திருக்கும் ஊடுருவல்

இந்திய நிதித் தொழில்நுட்பம் மற்றும் அதனுடன் தொடர்புடைய சேவைகள்நிறுவனம் (Indian Financial Technology and Allied Services – IFTAS) இயக்கும் மையப்படுத்தப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட நிதிச் செய்திக் கட்டமைப்பில் (Structured Financial Messaging System – SFMS)- அனுமதியற்ற முறையில் ஊடுருவி இந்தப் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப் பட்டதாக வங்கி குற்றம் சாட்டியுள்ளது. IFTAS என்பது ரிசர்வ் வங்கிக்கு மட்டுமேசொந்தமான துணை நிறுவனமாகும். இதுதொடர்பாக, மும்பை நோடல் சைபர் காவல்துறையினர் அடையாளம்தெரியாத நபர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தடயமற்ற கையாடல் அதிர்ச்சியளிக்கிறது

ஊடகங்களில் வெளியான தகவல்களின்படி, வங்கியின் புகாரில் குறிப் பிடப்பட்டுள்ள பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை பின்வருமாறு:

• அக்டோபர் 15 - 6 பரிவர்த்தனைகள்

• அக்டோபர் 16 - 88 பரிவர்த்தனைகள்

• அக்டோபர் 17 - 93 பரிவர்த்தனைகள்

• மொத்தம் - 187 பரிவர்த்தனைகள்

ஊடகங்களில் வெளியான புகாரின்படி, சர்ச்சைக்குரிய இந்தப் பணப்பரிமாற்றங்களைக் கண்டறிய வங்கியின்வழக்கமான பரிவர்த்தனைப் பதிவுகளில் எந்தத் தடயமும் கிடைக்கவில்லை. வங்கியின் மைய வங்கிச் செயல்பாட்டு அமைப்பு (Core Banking System), RTGS தீர்வுப் பதிவுகள் மற்றும் SFMS சேவையகப் பதிவுகள் ஆகியவற்றிலும் அவற்றைக் கண்டறிய முடியவில்லை.

தொழில்நுட்பக் கோளாறு இயல்பானதா?

பத்து கணக்குகள் தொடர்பான சில தடயங்கள் SFMS தரவுத்தளப் பதிவுகளில் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அந்தப் பரிவர்த்தனைகளுக்குரிய அடையாள ஆவணங்கள் (Transaction IDs) வங்கியின் பதிவுகளில் இடம்பெறவில்லை.மேலும், ஊடகங்களில் வெளியான செய்தியின்படி, ‘சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா’ 2026 அக்டோபர் 19 அன்று ஒரு புகாரை அளித்துள்ளது. அதில், அக்டோபர் 15 முதல் 17 வரையிலான காலகட்டத்தில் வங்கியின் வெளிச்செல்லும் RTGS பணப் பரிமாற்ற அமைப்பில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளது. சர்ச்சைக்குரிய பணப்பரிமாற்றங்கள் நடைபெற்ற அதே காலகட்டத்தில்தான் இந்தத் தொழில்நுட்பக் கோளாறும் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டிஜிட்டல் சான்றிதழ்களை உருவாக்கியது யார்?

இந்நிலையில், பின்வரும் கேள்விகளுக்கு விளக்கங்கள் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்:

1. பணம் செலுத்துவதற்கான அறிவுறுத்தல்கள் எவ்வாறு அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டன?

2. அந்தச் செய்திகளில் செல்லுபடியாகும் அங்கீகாரச் சான்றுகள் அல்லது டிஜிட்டல் சான்றிதழ்கள் இடம்பெற்றிருந்தனவா? அவை இருந்திருந்தால், அவற்றை உருவாக்கியது யார் அல்லது எது?

3. இந்தப் பணப் பரிமாற்றங்கள் வங்கியின் உள்கணக்குப் பதிவுகள் மற்றும் பணப் பரிமாற்றப் பதிவுகளுடன் ஏன் பொருந்தவில்லை?

மோசடி பரிவர்த்தனைகள் கண்டறியப்பட்டது எப்போது?

4. இந்த 187 பரிவர்த்தனைகள் நடைபெற்றுக்கொண்டி ருந்தபோதே கண்டறியப்பட்டனவா அல்லது பணம்வேறு கணக்குகளுக்கு மாற்றப்பட்ட பிறகுதான் கண்டறியப் பட்டனவா? அவை நடைபெற்றுக் கொண்டி ருந்தபோதே கண்டறியப் பட்டிருந்தால்,மேலும் மோசடிப் பரிவர்த்தனைகள் நடைபெறாமல் தடுக்கஎன்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன?

5. பணத்தைப் பெற்ற கணக்குகளைக் கட்டுப்படுத்தியவர்கள் யார்? அந்தக்கணக்குகளுக்குப் பரிமாற்றம் செய்யப்பட்ட பணத்தை முடக்குவதற்கு (Freeze) என்ன நடவடிக்கைகள்மேற்கொள்ளப்பட்டன? இதுவரை எவ்வளவு பணம் மீட்கப்பட்டுள்ளது?

பாதுகாப்புக் கட்டமைப்பு பலவீனமாகவா உள்ளது?

6. அக்டோபர் 15 முதல் 17 வரை ‘சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா’வின் வெளிச்செல்லும் RTGS பணப் பரிமாற்ற அமைப்பைப் பாதித்த தொழில்நுட்பக் கோளாறின் அடிப்படைக் காரணம் என்ன?7. ரிசர்வ் வங்கிக்கு முழுமையாக சொந்தமான துணை நிறுவனமான IFTAS இயக்கும் மையப்படுத்தப்பட்ட SFMS கட்டமைப்பு ஊடுருவித் தாக்கப்பட்டதா? அப்படியானால், அந்த அமைப்பின் பாதுகாப்புச் சுவர்கள் (Firewalls) ஏன் இவ்வளவுபலவீனமாக இருந்தன? அல்லது இந்தச் சம்பவத்தில் உள்நபர்கள் எவருக்காவது தொடர்பு உள்ளதா?8. இந்தச் சம்பவம் கண்டறியப்பட்டதிலிருந்து, IFTAS அமைப்பின் பாதுகாப்பை வலுப்படுத்தவும், ‘சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா’ மட்டுமின்றி மற்ற வங்கிகளின் தீர்வுக் கணக்குகளிலும் இதுபோன்ற அனுமதியற்ற ஊடுருவல்கள் நடைபெறாமல் தடுக்கவும் என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன?

பிரச்சனைகளின் தீவிரத்தைக் கவனம் கொள்ள வேண்டும்

சமீபத்தில் ‘ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா’ (SBI) தனது தரவுகள் திருடப்பட்டதாகத் தெரிவித்துள்ளது. அதேபோன்று, 2026 ஜூலை மாதத்தில் தரவுக் கசிவு ஏற்பட்டதை ‘பேங்க் ஆப் பரோடா’ ஒப்புக்கொண்டுள்ளது (25.10.2026 தேதியிட்ட தி இந்து).எனவே, இத்தகைய சம்பவங்களின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெறும் நாடாளுமன்ற நிலைக்குழுவின் மேற்பார்வையில், அவசர அடிப்படையில் தடயவியல் தொழில்நுட்பத் தணிக்கையும் (Forensic Technical Audit), விரிவான தடயவியல் விசாரணையும் மேற்கொள்ளுமாறு தங்களை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

ஊடுருவலா; வங்கியிலுள்ள நபர்களே காரணமா?

இந்த விசாரணையானது பின்வரும் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்:

* ‘ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா’ மற்றும் பேங்க் ஆப் பரோடா ஆகிய வங்கிகளில் நடைபெற்ற தரவுத் திருட்டுச் சம்பவங்கள் தொடர்பான அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்தல்.

* IFTAS இயக்கும் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் SFMS கட்டமைப்பில் ஏற்பட்ட அனுமதியற்ற ஊடுருவல் எவ்வாறு நிகழ்ந்தது என்பதை விரிவாக ஆராய்தல்.

* இச்சம்பவங்களில் வங்கிகளின் உள்நபர்களுக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பதைக் கண்டறிதல்.

தனியார் வெளிமுகமைகளை அனுமதிக்கக் கூடாது!

* ஆதாரங்களின் அடிப்படையில், வங்கிகள், அமைப்புகளை இயக்கும் நிறுவனங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட பிற தரப்பினரின் பொறுப்பினையும், உரிய பொறுப்புடைமையையும் (Accountability) நிலைநாட்டுதல்.

* பாதுகாப்புச் சுவர்களை (Firewalls) வலுப்படுத்துதல்.

* ரிசர்வ் வங்கி மற்றும் அனைத்துப் பொதுத்துறை வங்கிகளின் பணிகளை வெளி நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் கொள்கையை (Outsourcing Policy) மறுபரிசீலனை செய்தல்.

நாட்டில் உள்ள கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களின் நலன்களையும், பொதுமக்களின் நலன்களையும்பாதுகாப்பதே இத்தகைய விசாரணையின் முக்கிய நோக்கமாகஇருக்கவேண்டும்.தங்களிடமிருந்து விரைவான பதிலை எதிர்பார்க்கிறேன்.

இவ்வாறு சு. வெங்கடேசன் எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.