தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அம்பேத்கர் தலைமையேற்ற மகத் சத்தியாகிரகத்தின் நூற்றாண்டு விழா மனுவாதம் மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிராக சிபிஐ(எம்) பிரம்மாண்ட பேரணி - மாநாடு

23 Mar 2026, 3:39 pm
அம்பேத்கர் தலைமையேற்ற மகத் சத்தியாகிரகத்தின் நூற்றாண்டு விழா மனுவாதம் மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிராக சிபிஐ(எம்) பிரம்மாண்ட பேரணி - மாநாடு

அம்பேத்கர் தலைமையேற்ற மகத் சத்தியாகிரகத்தின் நூற்றாண்டு விழா மனுவாதம் மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிராக சிபிஐ(எம்) பிரம்மாண்ட பேரணி - மாநாடு

மகத் (மகாராஷ்டிரா), மார்ச் 23- இந்திய சமூகப் போராட்ட வரலாற்றில் ஒரு  மாபெரும் திருப்புமுனையாக அமைந்த டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் தலைமையிலான ‘மகத் சத்தி யாகிரகத்தின்’ (Mahad Satyagraha) நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மகாராஷ்டிர மாநிலம் மகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சாதி ஒழிப்புப் போராட்ட முன்னணி சார்பில் எழுச்சி யூட்டும் மாநாடு மற்றும் பிரம்மாண்டப் பேரணி, மார்ச் 20 அன்று நடைபெற்றது. 1927 மார்ச் 20  அன்று தீண்டாமைக் கொடுமைக்கு எதிராக சௌ தார் குளத்தில் தண்ணீர் குடிக்கும் உரிமையை நிலைநாட்டிய அந்த வரலாற்று நிகழ்வின் 100-ஆவது ஆண்டினை முன்னிட்டு, “மனுவாதம் மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிரான மனித உரிமை மாநாடு” என்ற பெயரில் இந்த இருநாள் நிகழ்வுகள் உணர்வுப்பூர்வமாக ஒருங்கிணைக் கப்பட்டன.

மகத் சத்தியாகிரகம்: தீண்டாமைக்கு எதிரான முதல் பெரும் போர் கடந்த 1927-ஆம் ஆண்டு மார்ச் 20 அன்று, பொ துக்குளத்தில் தலித் மக்கள் தண்ணீர் எடுப்ப தற்கான உரிமையை நிலைநாட்ட டாக்டர் அம்பேத் கர், மகத் போராட்டத்தைத் தொடங்கினார்.

மகத்தில் உள்ள சௌதார் குளத்தில், ஆயிரக்கணக்கான மக்களுடன் திரண்டுச் சென்ற அம்பேத்கர், தனது இரண்டு கைகளாலும் தண்ணீரை அள்ளிப் பருகி, ஒடுக்கப்பட்ட மக்களின் மனித உரிமையை உலகிற்குப் பறைசாற்றினார். இப்போராட்டமே இந்திய அளவில் தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராகத் திரள்வதற்கான மாபெரும் உத்வே கத்தை அளித்தது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு நடைபெற்று நூறு ஆண்டுகள் நிறை வடைவதையொட்டி, உழைக்கும் வர்க்கத்தின் உரிமைப் போராட்டங்களுடன் சாதி ஒழிப்புப் போராட்டத்தை இணைக்கும் நோக்கில் சிபிஐ(எம்) இந்த மாநாட்டை நடத்தியுள்ளது.

சிபிஐ(எம்) பொதுச் செயலாளர்  எம்.ஏ. பேபி ஆற்றிய எழுச்சி உரை இந்த மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செய லாளர் எம்.ஏ. பேபி, சமூக மாற்றத்திற்கான அம்பேத் கரின் மரபைத் தற்கால உழைக்கும் வர்க்கம் முன் னெடுத்துச் செல்ல வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். “சௌதார் குளத்தில் தண்ணீர் குடிக்கும் உரிமையை நிலைநாட்டிய அதே 1927-ஆம்  ஆண்டின் டிசம்பர் 25 அன்றுதான், சமூக அநீதி யின் ஊற்றுக் கண்ணான ‘மனுஸ்மிருதி’ எரிப்புப் போராட்டத்தையும் டாக்டர் அம்பேத்கர் நடத்தினார். எனவே, வரும் டிசம்பர் 25-க்குள் மனுஸ்மிருதி எரிப்புப் போராட்டத்தின் நூற்றாண்டையும் நாடு தழுவிய அளவில் பெருந்திரளான மக்கள் பங்கேற்புடன் ஒரு மாபெரும் மக்கள் இயக்கமாக நடத்த வேண்டும்,” என்று அவர் கட்சியினருக்கு அறைகூவல் விடுத்தார். கம்யூனிஸ்டுகளும் அம்பேத்கரும்: இணைந்த போராட்ட வரலாறு மாநாட்டிற்கு டாக்டர் எஸ்.கே. ரேகே தலைமை  தாங்கினார்.

சிபிஐ(எம்) மகாராஷ்டிர மாநிலச் செய லாளர் டாக்டர் அஜித் நவாலே உரையாற்றுகை யில், மகத் சத்தியாகிரகத்தில் அம்பேத்கருடன் இணைந்து செயல்பட்ட கம்யூனிஸ்ட் தலைவர்க ளின் பங்களிப்பைச் சுருக்கமாக விளக்கினார். “மகத் போராட்டத்தின் முக்கிய அமைப்பாளர்களில் ஒருவராகப் புகழ்பெற்ற கம்யூனிஸ்ட் தலைவர் ஆர். பி. மோரே (R.B. More) திகழ்ந்தார். அதேபோல், ஷாம்ராவ் பருலேகர் தலைமையில் நடைபெற்ற ‘கோட்டி’ இயக்கமும் நிலப்பிரபுத்துவத்திற்கு எதி ராக இப்பகுதியில் பெரும் தாக்கத்தை ஏற் படுத்தியது” என்று அவர் குறிப்பிட்டார். கம்யூனிச இயக்கமும் சமூக நீதி இயக்கமும் எவ்வாறு இணை யாகப் பயணித்தன என்பதை அவர் தரவுகளுடன் விளக்கினார்.

தலைவர்களின் வரலாற்றுப் பயணம் மற்றும் மரியாதை மாநாட்டிற்கு முன்னதாக, பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி, அரசியல் தலைமைக்குழு உறுப்பி னர்கள் டாக்டர் அசோக் தாவ்லே, மரியம் தாவ்லே உள்ளிட்ட தலைவர்கள், டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் நினைவிடத்திற்கும், சத்ரபதி சிவாஜி மகாராஜின் சிலைக்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து, சௌதார் குளம் மற்றும் மனுஸ்மிருதி எரிக்கப்பட்ட இடமான ‘கிரந்தி பூமி’க்குச் சென்று அஞ்சலி செலுத்தினர்.

தலைவர்கள் குழுவினர், ஆர்.பி. மோரேயின் சொந்தக் கிராமமான தாஸ்கானுக்கும் சென்றனர். ஆர்.பி. மோரேயின் பேரனான சுபோத் மோரே, சாதியாதிக்கப் பழமைவாதிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் அம்பேத்கர் மகத்திற்கு வந்தடைந்த பாதையையும், அங்குள்ள வரலாற்றுச் சின்னங்க ளையும் தலைவர்களுக்கு விளக்கினார். தொ டர்ந்து ஆர்.பி. மோரே மேல்நிலைப் பள்ளிக்கும் சென்ற தலைவர்கள், கல்வியின் வழியே சமூகம் அடைய வேண்டிய மாற்றங்கள் குறித்து விவாதித்தனர். மாநாட்டின் தீர்மானங்களும் எதிர்காலத் திட்டமும் மகாத்மா காந்தியின் பேரனான துஷார் காந்தி,  சமூகச் செயற்பாட்டாளர் சாம்பாஜி பகத் உள்ளிட் டோரும் பங்கேற்ற இந்த மாநாட்டில், சமூக நீதி, சாதி ஒழிப்பு மற்றும் சமத்துவக் கொள்கைகளுக்கா கத் தொடர்ந்து சமரசமின்றிப் போராடுவோம் என ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் உறுதி மொழி ஏற்கப்பட்டது.

மார்ச் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இந்தப் பேரணி மகத் நக ரின் முக்கியச் சந்திப்புகளைக் கடந்து சென்றபோது, மக்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். தற்போது நாட்டில் வளர்ந்து வரும் வகுப்பு வாத அரசியலுக்கு எதிராக, அம்பேத்கரின் சமத்து வக் கொள்கைகளையும் மார்க்சியத்தின் பொரு ளாதார விடுதலையையும் இணைப்பதன் மூலமே  உண்மையான விடுதலையைப் பெற முடியும் என்பதே இந்த நூற்றாண்டு விழாவின் மையச் செய்தியாக அமைந்தது. மகாராஷ்டிரா முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இந்த நிகழ்வு, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்கான போராட் டத்தில் ஒரு புதிய உத்வேகத்தைப் பாய்ச்சியுள்ளது. (லெப்ட் வியூஸ்)

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.