அரசு மேல்நிலைப் பள்ளியில் நூற்றாண்டு விழா
2 Feb 2026, 3:32 pm
<p><strong>அரசு மேல்நிலைப் பள்ளியில் நூற்றாண்டு விழா</strong></p>
<p>திருவில்லிபுத்தூர், பிப்.2- சிவகாசி கல்வி மாவட்டம், வத்திராயி ருப்பு வட்டத்திற்கு உட்பட்ட மதுரை நெடுஞ்சாலையில் உள்ள எஸ்.அம்மாபட்டி கிராமத்தில் அமைந்துள்ள அரசு மேல் நிலைப் பள்ளியின் நூற்றாண்டு விழா, சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் அ.சுரேகா தலைமை தாங்கினார். ஆசிரியை பாக்கியலட்சுமி வரவேற்புரை நிகழ்த்தினார். பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் ரெங்கராஜன் முன்னிலை வகித்தார். நூற்றாண்டு விழாவில், எஸ்.அம்மா பட்டி கிராமத்தைச் சேர்ந்தவரும், இப்பள்ளி யின் முன்னாள் மாணவருமான முன்னாள் காவல்துறை தலைமை இயக்குநர் டாக்டர் ராதாகிருஷ்ணன், பென்னிங்டன் கமிட்டி துணைத் தலைவர் முத்துப்பட்டர், இலக்கிய சொற்பொழிவாளர் மற்றும் வழக்க றிஞர் அன்னக்கொடி ஆகியோர் சிறப்புரை யாற்றினர். விழாவில், முன்னாள் தலைமை ஆசி ரியை உமாராணி, முன்னாள் மாணவர் பொன் செந்தில்குமார், ஆசிரியர் செல்வ பூபதி, பெற்றோர்–ஆசிரியர் கழக உறுப்பி னர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். மாணவ–மாணவியர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் விழாவிற்கு சிறப்பு சேர்த்தன. முடிவில், ஆசிரியர் முருகன் நன்றி தெரி வித்தார்.</p>
