முந்தய பக்கம்

அரங்கநாதன்பேட்டை அரசுப் பள்ளியில் நூற்றாண்டு விழா

7 Mar 2026, 2:36 pm
அரங்கநாதன்பேட்டை அரசுப் பள்ளியில் நூற்றாண்டு விழா
<p><strong>அரங்கநாதன்பேட்டை அரசுப் பள்ளியில் நூற்றாண்டு விழா&nbsp;</strong></p> <p>கரூர், மார்ச் 7 - கரூர் மாவட்டம், அரங்கநாதன் பேட்டை யில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளி துவங்கி நூறாண்டுகள் நிறைவு பெற்றதை கொண்டாடும் வகையில், நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. &nbsp;இந்த பள்ளி சிறந்த மாணவர்களை உரு வாக்கியுள்ளது. பள்ளியில் பயின்ற முன் னாள் மாணவர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் &nbsp;அனைவரின் பங்களிப்புடன் பள்ளியின் சார்பில் நடைபெற்ற நூற் றாண்டு விழாவிற்கு பள்ளி &nbsp;மேலாண்மை குழு தலைவர் அகிலாண்டேஸ்வரி தலைமை வகித்தார். &nbsp;பள்ளியின் தலைமையா சிரியர் வசந்தகுமாரி வர வேற்று ஆண்டறிக்கையை முன் வைத்தார். கரூர் வட்டாரக் கல்வி அலுவலர் &nbsp;சதீஷ்குமார், பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரி யரும், நல்லாசிரியர் &nbsp;விருது பெற்றவருமான கருப்பண்ணன், ஆசிரியர்கள் மணிகண்டன், சந்தானத்துரை, மணிமேகலை, ராணி ஆகி யோர் மாணவர்களுக்கு பரிசு வழங்கி சிறப்பு ரையாற்றினர். பள்ளியின் நுழைவாயிலில் நூற்றாண்டு நினைவு வளைவு தூண் அமைக்கப்பட்டது. பள்ளியின் உதவி ஆசிரியர் &nbsp;ஜெயந்தி நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram